வீரன் இயக்குனர் எ.ஆர்.கே சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய், முனீஷ்காந்த் ராமதாஸ் என பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் 'சத்யா ஜோதி பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இணைந்து இசையமைத்துள்ளனர்.
நகைச்சுவை மற்றும் அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள வீரன் திரைப்படத்தினை ஒளிப்பதிவாளர் தீபக் மேனன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரசன்னா எடிட்டிங் செய்துள்ளார்.
வீரன் திரைப்படம் தமிழக திரையரங்கில் 2023 ஜூன் 02 வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
வீரன் திரைப்படத்தின் கதை
வீரானூர் எனும் கிராமத்தில் உள்ள சிறுவன் குமரனுக்கு (ஹிப் ஹாப் ஆதி) மின்னல் தாக்கி விபத்து ஏற்படுகிறது. அதன் காரணமாக சுயநினைவை இழக்கிறான். அந்த சிறுவனை அவனது அக்கா சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று காப்பாற்றுகிறார்.
தனது வீரானூர் ஊருக்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட உள்ளதை ஒரு கட்டத்தில் உணரும் குமரன் தனக்குள் இருக்கும் மின்னல் சக்தியை வைத்துக் கொண்டு ஊர் மக்களின் காவல் தெய்வமான வீரன் கெட்டப்பில் தோன்றி வில்லன்களை பந்தாடி அந்த கிராமத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் வீரன் படத்தின் கதை.