X
வீட்ல விசேஷம்
Comedy | 17 Jun 2022 | U | 130 Mins
Tamil

வீட்ல விசேஷம் கதை

வீட்ல விசேஷம் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மற்றும் இயக்குனர் என் ஜே சரவணன் இணைந்து இயக்கியுள்ள நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் ராகுல் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

வீட்ல விசேஷம் படத்தில் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார்.

இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி பிரபலமான 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும். எல் கே ஜிமூக்குத்தி அம்மன்  திரைப்படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக ஆர் ஜே பாலாஜி இயக்குனராகவும், நடிகராகவும் இப்படத்தினை இயக்கி நடித்துள்ளார்.



வீட்ல விசேஷம் திரைப்படத்தின் கதை

கதைக்கரு

திருமண வயதில் உள்ள ஆர் ஜே பாலாஜியின் அம்மா ஊர்வசி கர்ப்பமாகிறார். இதனால் அவர்களது வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் ரகளைகள் தான் இப்படத்தின் கதைக்கரு.

கதை

திருமணமாகும் வயதில் மகன்கள் உள்ள நிலையில், அப்பா சத்யராஜின் அதீத கொஞ்சல் காரணமாக அம்மா ஊர்வசி கர்ப்பமாகிறார். 50 வயதில் கர்ப்பமான விஷயத்தை மகன்களிடம் எப்படி சொல்வது, சமூகம் எப்படி பார்க்கும், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன பேசுவார்கள் என ஏகப்பட்ட விஷயங்களை காமெடி மற்றும் கருத்து கலந்து அணுகியுள்ள படம் தான் வீட்ல விசேஷம்.

மொத்தத்தில் 50 வயதில் ஒரு பெண் கர்ப்பமானால் அவளை கர்ப்பமாக்கிய ஆணை வீரனாகவும், அந்த பெண்ணை கேவலமாகவும் பார்க்கும் சமூகத்தின் எண்ணத்திற்கு எதிரான சவுக்கடி தான் இந்த படம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+