X
கவண்
Action | Romance | 31 Mar 2017 | U |
Tamil

கவண் கதை

கவண் இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் டி ராஜேந்தர் நடித்த திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

கதை : 

மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு விஸ்காம் மாதிரி ஒரு பட்டப்படிப்பை முடித்து, ஒரு தனியார் சேனலில் சேர்கிறார் விஜய் சேதுபதி. இடையில் மடோனாவுடன் ஒரு காதல்... பின்னர் பிரிவு. பார்த்தால், அதே சேனலில் மடோனாவில் வேலை செய்வது தெரிகிறது.

இன்னொரு பக்கம் அரசியல்வாதி போஸ் வெங்கட்டின் தொழிற்சாலை கழிவு அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கலந்து குடிநீரை விஷமாக்க, அதற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துகிறார்கள் விக்ராந்த் மற்றும் அவர் தோழி. போராட்டத்தை நசுக்க தோழியைக் கற்பழித்துவிடுகிறார் போஸ் வெங்கட். மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் அந்தப் பெண்ணை மடோனாவும் விஜய் சேதுபதியும் நேரில் பார்த்து வீடியோ பேட்டி எடுத்து சேனலில் வெளியிடுகின்றனர்.

கடுப்பாகும் போஸ், சேனல் அதிபர் ஆகாஷ்தீபுடன் டீல் பேசி, அந்த பேட்டியையே மாற்றிவிடுகின்றனர். தொடர்ந்து சேனல் அதிபருடன் மோதல் வெடிக்க, விஜய் சேதுபதி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து வெளியேறி, டி ராஜேந்தர் நடத்தும் ஒரு சின்ன சேனலில் சேர்கிறார்கள்.

டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்திலிருக்கும் ஆகாஷ்தீப் சேனலை, டிஆரின் சின்ன சேனலை வைத்து எப்படி வீழ்த்துகிறார்கள் என்பது மீதிக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+