கவண்

  கவண்

  U | Action
  Release Date : 31 Mar 2017
  3/5
  Critics Rating
  5/5
  Audience Review
  கவண் இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் டி ராஜேந்தர் நடித்த திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

  கதை : 

  மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு விஸ்காம் மாதிரி ஒரு பட்டப்படிப்பை முடித்து, ஒரு தனியார் சேனலில் சேர்கிறார் விஜய் சேதுபதி. இடையில் மடோனாவுடன் ஒரு காதல்... பின்னர் பிரிவு. பார்த்தால், அதே சேனலில் மடோனாவில் வேலை செய்வது தெரிகிறது.

  இன்னொரு பக்கம் அரசியல்வாதி போஸ் வெங்கட்டின் தொழிற்சாலை கழிவு அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கலந்து...
  • கே.வி. ஆனந்த்
   Director
  • கல்பாத்தி எஸ் அகோரம்
   Producer
  • கல்பாத்தி எஸ் கணேஷ்
   Producer
  • கல்பாத்தி எஸ் சுரேஷ்
   Producer
  • ஹிப்ஹாப் தமிழா
   Music Director
  • tamil.filmibeat.com
   3/5
   ஊர் உலகத்தையே கேள்வி கேட்கும் மீடியா உலகின் இன்னொரு முகம் கோரமானது. லஞ்சம், தில்லு முல்லு, ஒரு சார்புத் தன்மை என இருக்கிற அத்தனை எதிர் நிழல்கள் உலாவும் அந்த முகத்தை, கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக, சதை கிழியும் அளவுக்குத் தோலுரித்துவிட்டார் கே வி ஆனந்த், கவண் மூலம்!

   கேவி ஆனந்த் படங்களுக்கே உரிய அத்தனை அம்சங்களும் இந்தப் படத்திலும் உண்டு. ஒரு பக்கம் அது ஓகேதான் என்றாலும், ஒரே மாதிரி காட்சிகளைப் பார்க்கும் ஆயாசம் வருகிறது.

   மற்றபடி மீடியா உலகின், குறிப்பாக தொலைக்காட்சித் துறையில் டிஆர்பிக்காக நடக்கும தகிடுதத்தங்களிலிருந்து அத்தனை இருட்டுப் பக்கங்களையும் பட்டவர்த்தனமாக்கியுள்ளார் கேவி ஆனந்த்.

   எந்தப் பாத்திரமென்றாலும் அதைச் செய்யவே படைக்கப்பட்டவர் போலத் தெரிகிறார் விஜய் சேதுபதி. ஒரு மில்லிமீட்டர் கூட மிகையில்லாமல் இத்தனை இயல்பான நடிகனைப் பார்க்கும்போது பரவசம..