விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி ரவுடியாகவும், சிரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலக்ஷ்மி சரத்குமார், விவேக் பிரஷன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.