விசாரணை தமிழ் அதிரடி திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் நடிகர் நடிகைகள் அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, முருகதாஸ், ஆனந்தி மற்றும் மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை :
ஆந்திரா மாவட்டம் குண்டூரில் உள்ள பூங்கா ஒன்றில் நான்கு தமிழ் இளைஞர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக யாருமில்லை என்பதை அறிந்து ஒரு திருட்டு வழக்கில் கைது செய்கின்றனர். இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. கைதான நால்வர் தங்கள் தரப்பில் தவறில்லை என்று நீதிபதியிடம் முறையிடுகின்றனர். ஆனால், அங்கு மொழி புரியாத காரணத்தினால், தமிழ் நாட்டிலிருந்து ஒருவரை வரவைக்கின்றது ஆந்திரா நீதிமன்றம். இவர்களுக்கு உதவி செய்வதற்காக சமுத்திரகனி நாடுகின்றனர். நால்வரையும் குற்றமற்றவர் என நிருபித்து தமிழகம் அழைத்து வருகின்றார்.
வரும் வழியில் ஒருவர் மட்டும் இறங்கி விட மற்ற மூவரையும் காவல் துறையினர் தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்தி அவர்கள் எடுக்கும் கொடூர முடிவுகள் தான் விசாரணை படத்தின் விறுவிறுப்பான மீதிகதை.