X
ரைட்டர்
Crime | Drama | 24 Dec 2021 | U/A | 150 Mins
Tamil

ரைட்டர் கதை

ரைட்டர் - இயக்குனர் ஃபிராங்க்ளின் ஜகோப் இயக்கத்தில் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் 'நீலம் புரோடுக்ஷன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார்.

தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பத்தோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மணிகண்டன் சிவகுமார் எடிட்டிங் செய்துள்ளார்.



ரைட்டர் திரைப்படத்தின் கதை

தங்கராஜ் (சமுத்திரக்கனி) திருச்சியில் ஹெட் கான்ஸ்டபிள் (ரைட்டர்) பணியில் உள்ளார். 35 ஆண்டுகளாக காவலர் பணியில் இருக்கும் சமுத்திரக்கனி, காவலர்களுக்காக ஒரு சங்கம் வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் சமுத்திரக்கனிக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளது. பின் ஓய்வு பெற வேண்டும்.

காவலர்களுக்கு சங்கம் தொடங்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடங்குகிறார். அதற்காக பல அதிகாரிகளின் கோபத்தை பெற்று சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகிறார்.

சென்னையில் சமுத்திரக்கனிக்கு ரைட்டர் பணி கொடுக்காமல் ஒரு இளைஞனை கவனிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் வேலை கொடுக்கிறார்கள். அந்த இளைஞன் எந்த தவறும் செய்தவர், ஒரு பொய் வழக்கில் அந்த இளைஞனை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். இதனை அறிந்த சமுத்திரக்கனி அந்த இளைஞனை எவ்வாறு காப்பாற்றினார்? என்பதே படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+