ழகரம் கதை

  ழகரம் இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் நந்தா நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பால் டிபோட் கே கதிரேசன் தயாரிக்க, இசையமைப்பாளர் தரன் குமார் இசையமைத்துள்ளார்.

  இத்திரைப்படத்தின் மூலம் இயகுரனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் க்ரிஷ். இவர் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை பல கஷ்டங்களை கடந்து, எடுத்து முடித்துள்ளார். இவரின் முதல் படத்தையே, 'அரிமா சக்தி விருதும்' 'ஈரோடு தமிழ் சங்கத்தின் சிறந்த நாவல் விருதும்' பெற்ற 'ப்ராஜக்ட் ஃ' நாவலை தழுவி எடுத்துள்ளார்.

  இத்திரைப்படமானது ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

  தற்போதைய காலத்தில், படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கி, வரலாற்று சின்னங்களாக விளங்கும் மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது. படத்தின் இடையிடையே தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விபரங்கள் கதையும்  கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குனர்.

  சமீபத்தில் இந்த படத்தின் முதல் பார்வையை இயக்குனர், விஜய் மில்டன் வெளியிட்டார். இத்திரைப்படமானது யு சான்றிதழை பெற்று 2019 ஏப்ரல் 12-ல் வெளியாகியுள்ளது.
  **Note:Hey! Would you like to share the story of the movie ழகரம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).