X
ழகரம்

ழகரம்

Drama | History | Social | 12 Apr 2019 | U | 113 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

ழகரம் கதை

ழகரம்  இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் நந்தா நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பால் டிபோட் கே கதிரேசன் தயாரிக்க, இசையமைப்பாளர் தரன் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் இயகுரனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் க்ரிஷ். இவர் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை பல கஷ்டங்களை கடந்து, எடுத்து முடித்துள்ளார். இவரின் முதல் படத்தையே, 'அரிமா சக்தி விருதும்' 'ஈரோடு தமிழ் சங்கத்தின் சிறந்த நாவல் விருதும்' பெற்ற 'ப்ராஜக்ட் ஃ' நாவலை தழுவி எடுத்துள்ளார். இத்திரைப்படமானது ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  தற்போதைய காலத்தில், படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கி, வரலாற்று சின்னங்களாக விளங்கும் மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது. படத்தின் இடையிடையே தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விபரங்கள் கதையும்  கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குனர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பார்வையை இயக்குனர், விஜய் மில்டன் வெளியிட்டார். இத்திரைப்படமானது யு சான்றிதழை பெற்று 2019 ஏப்ரல் 12-ல் வெளியாகியுள்ளது.
Read More

ழகரம் நடிகர்கள் & படக்குழுவினர்

ழகரம் அணியின் தகவல்

இயக்குனர் க்ரிஷ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை தரன் குமார்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ழகரம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ரூ,10 லட்சம் பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து அதனை ரிலீசும் செய்திருக்கிறார் இயக்குனர் கிரிஷ். ரூ.10 லட்சத்தில் என்ன எடுக்க முடியுமா, அதற்கு மேலேயே சிறப்பாக ஒரு படத்தை எடுத்திருக்கிறார். புதையலை தேடி செல்லும் நந்தா, அதன் மர்ம குறிப்பிகளை ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. படம் முழுவதும் இந்த சுவராஸ்யம் நீட்டித்து இருக்கிறது. புராஜெக்ட் அக் நாவை தழுவி எடுக்கப்பட்ட கதை தான் என்றாலும், நிறைய விஷயங்களை ஆராய்ந்து, படித்து தெரிவிந்துகொண்டு, படத்தை எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள். ஒரு இயக்குனரின் கனவை நிறைவேற்றுவதற்காக சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த நந்தாவுக்கு வாழ்த்துக்கள். படத்திற்கு தேவையான நடிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார்.

ழகரம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ழகரம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+