twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Zhagaram Review: ஒரு புதையல்... பல புதிர்கள்... மூன்று இளைஞர்களின் தேடல் பயணம்... ழகரம்! விமர்சனம்

    புதையலை தேடி செல்லும் மூன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களே ழகரம் திரைப்படத்தி கதை.

    |

    Rating:
    2.5/5
    Star Cast: நந்தா, எடேன் குரியகோஸ்ஸ்
    Director: க்ரிஷ்

    சென்னை: ஒரு புதையலை தேடி செல்லும் மூன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் மர்மமான அனுபவங்கள் தான் ழகரம் திரைப்படத்தின் கதை.

    நாயகன் நந்தாவின் தாத்தா ஒரு தொல்லியல் துறை நிபுணர். அவர் நீண்ட காலமாக ஒரு புதையலை தேடி வருகிறார். அவரை சில மர்ம நபர்கள் கொலை செய்துவிடுகின்றனர். புதையல் பற்றிய ரகசியங்களை அழித்துவிட வேண்டும் என ஒரு கடிதம் மூலம் நந்தாவிடம் கேட்டுக்கொள்கிறார். மேலும், அந்த ரகசியங்கள் இருக்கும் இடம் பற்றிய சில மர்ம குறிப்புகளையும் அத்துடன் இணைத்திருக்கிறார்.

    Zhagaram review: A puzzle solving screenplay that engages audience

    இதற்கிடையே ஒரு மர்ம நபர் நந்தாவை, கொலை செய்வதாக மிரட்டி, புதையலை எடுக்க பணிக்கிறான். இந்த மர்ம நபரின் மிரட்டலுக்கு பயந்து, தனது இரண்டு நண்பர்களை சேர்த்துக்கொண்டு புதையலை தேடிப் புறப்படுகிறார் நந்தா. அவர் அந்த புதையலை கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது தான் கதை.

    ரூ,10 லட்சம் பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து அதனை ரிலீசும் செய்திருக்கிறார் இயக்குனர் கிரிஷ். ரூ.10 லட்சத்தில் என்ன எடுக்க முடியுமா, அதற்கு மேலேயே சிறப்பாக ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.

    புதையலை தேடி செல்லும் நந்தா, அதன் மர்ம குறிப்பிகளை ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. படம் முழுவதும் இந்த சுவராஸ்யம் நீட்டித்து இருக்கிறது. புராஜெக்ட் அக் நாவை தழுவி எடுக்கப்பட்ட கதை தான் என்றாலும், நிறைய விஷயங்களை ஆராய்ந்து, படித்து தெரிவிந்துகொண்டு, படத்தை எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.

    Zhagaram review: A puzzle solving screenplay that engages audience

    ஒரு இயக்குனரின் கனவை நிறைவேற்றுவதற்காக சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த நந்தாவுக்கு வாழ்த்துக்கள். படத்திற்கு தேவையான நடிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார்.

    Zhagaram review: A puzzle solving screenplay that engages audience

    ஹீரோயின் ஈடன் குரியகோஸ், நந்தாவின் நண்பர்கள் சந்திரமோகன் மற்றும் விஷ்ணு பரத் உள்ளிட்டோரும் நன்றாகவே நடித்துள்ளனர். தரன் குமாரின் இசை, வெங்கட் லக்ஷ்மணனின் படத்தொகுப்பு, ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் படத்தின் பட்ஜெட்டை மீறி சிறப்பாக அமைந்துள்ளது.

    Zhagaram review: A puzzle solving screenplay that engages audience

    பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக நிறைய காட்சிகளை, ஸ்கேட்ச் ஆர்ட் மூலம் விளக்கி இருக்கிறார் இயக்குனர். ஆனால், படம் முழுவதும் வெறும் உரையாடல்களாகவே இருப்பது, சில சமயம் போரடிக்க வைத்துவிடுகிறது. அதேபோல், குறும்படம் பார்க்கும் உணர்வையும் ஏற்படுத்துகிறது.

    Zhagaram review: A puzzle solving screenplay that engages audience

    இருப்பினும், சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாக சொன்னதற்காக ழகரம் படத்திற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

    English summary
    The Zhagaram is a treasure hunt tamil Film directed by debutant director Krish has adapted Kava Kamz’s Tamil fiction novel, Project AK.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X