twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருது பெற்ற சிறந்த மலையாள மூவி ‘திங்களச்ச நிச்சயம்’ ரிவ்யூ..கலகல படத்தை ஓடிடியில் பார்க்கலாம்

    |

    திருவனந்தபுரம்: 'திங்களச்ச நிச்சயம்' திரைப்படம் சிறந்த மலையாள மொழிப் படம் என்ற தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.

    சென்னா ஹெக்டே இயக்கத்தில் நேரடியாக சோனி ஓடிடியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஏற்கனவே சிறந்த கதை, சிறந்த இரண்டாவது படம் என கேரள மாநில திரைப்பட விருதுகளையும் 'திங்களச்ச நிச்சயம்' வென்றுள்ளது.

    'அய்யப்பனும் கோஷியும்’ படத்துக்கு 4 தேசிய விருதுகள் போதாது: டைரக்டர் சச்சி இப்போ இருந்துருந்தா..?'அய்யப்பனும் கோஷியும்’ படத்துக்கு 4 தேசிய விருதுகள் போதாது: டைரக்டர் சச்சி இப்போ இருந்துருந்தா..?

    சிறந்த மலையாள திரைப்படம்

    சிறந்த மலையாள திரைப்படம்

    சென்னா ஹெக்டே இயக்கியுள்ள 'திங்களச்ச நிச்சயம்' திரைப்படம், நேரடியாக சோனி ஓடிடியில் வெளியானது. கேரள மாநில திரைப்பட விருது விழாவில், சிறந்த கதை, சிறந்த இரண்டாவது திரைப்படம் என 2 விருதுகளை வென்ற இத்திரைப்படம், தற்போது தேசிய விருதையும் வென்றுள்ளது. தேசிய விருதில் சிறந்த மலையாளப் படமாக தேர்வாகியுள்ள 'திங்களச்ச நிச்சயம்' படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கொரோனா ஊரடங்கிலும் அசத்தல்

    கொரோனா ஊரடங்கிலும் அசத்தல்

    கொரோனா வைரஸ் பரவலால் உலகமே முடங்கிக் கிடக்க, மலையாள திரைத்துரை மட்டும் தனியாக இயங்கிக் கொண்டிருந்ததோ என்னவோ.? ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவந்த உடனே, அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்டில் தரமான படங்களை எடுத்து ஓடிடி தளங்களில் வெளியிட்டனர். அதில் குறிப்பாக ஃபஹத் ஃபாசிலின் 'ஜோஜி', டோவினோ தாமஸின் 'கள' திங்களச்ச நிச்சயம் போன்ற படங்கள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

    சிங்கிள் லொக்கேஷன்

    சிங்கிள் லொக்கேஷன்

    'திங்களச்ச நிச்சயம்' படத்தின் 90 சதவிகிதம் காட்சிகள், ஒரு சிறிய வீட்டிலும் அதை சுற்றியுமே எடுத்து முடிக்கப்பட்டன. கூடுதலாக இன்னும் இரண்டு அல்லது மூன்று லொக்கேஷன்களுக்கு மட்டுமே, இப்படத்தின் காட்சிகள் நகரும், அதுவும் சில நிமிடங்கள் தான். ஆனாலும், ஒருநொடிக் கூட படம் பார்ப்பவர்களை அசந்துவிட முடியாதபடி, அவ்வளவு நேர்த்தியாக திரைக்கதையை செதுக்கியிருப்பார் இயக்குநர் சென்னா ஹெக்டே.

    விஜயனின் போராட்டம்

    விஜயனின் போராட்டம்

    'திங்களச்ச நிச்சயம்' படம் எடுக்கப்பட்ட லொக்கேஷனைப் போலவே, படத்தின் கதையும் ஒருவரிக்கும் குறைவு தான். ஆனால், கதையில் சுவாரஸ்யங்களும், பாத்திரங்களின் வடிவமைப்பும் அமர்க்களமாக இருக்கும். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த விஜயனுக்கு 2 மகள்கள், ஒரு மகன். மூத்த பெண் அப்பாவின் பேச்சை மீறி, காதல் திருமணம் செய்துவிடுகிறாள். இதனால், மகளிடமும் அவரது மாப்பிள்ளையிடமும் விஜயனுக்கு பேச்சுவார்த்தைக் கிடையாது.

    திங்கட்கிழமை நிச்சயம்

    திங்கட்கிழமை நிச்சயம்

    இரண்டாவது மகள் தன் விருப்பப்படி தான் திருமணம் செய்துகொள்வாள் என நம்பும் விஜயன், அவருக்கு மாப்பிள்ளையும் பார்த்து திங்கட்கிழமை நிச்சயம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால், இரண்டாவது மகளும் ஒருவரை காதலிக்கிறார். இன்னொருபக்கம் மகனின் காதலியும் விஜயனின் வீட்டுக்கு வர, இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் படத்தின் மீதிக் கதை. உறவுகள் ஒன்றுகூடி நிச்சயத்திற்கு ரெடியாகிக் கொண்டிருக்க, அங்கே விஜயனின் வீராப்பும், அதனால் நடக்கும் காமெடி களேபரங்களும் அடடா ரகம்.

    Recommended Video

    Soorarai Pottru National Award | ஜெயிச்சிட்டோம் மாறா | வென்று காட்டிய சூரரைப் போற்று *India
    கண்டிப்பாக பார்க்கலாம்

    கண்டிப்பாக பார்க்கலாம்

    ஒன்றுமே இல்லாத கதைகளுக்காகவும், வெற்று பிரமாண்டங்களுக்காகவும் உலகம் முழுக்க லொக்கேஷன்கள் தேடி பறக்கிறார்கள் சில இயக்குநர்கள். ஆனால், இருக்கும் லொக்கேஷனுக்கு தகுந்த கதையை தயார் செய்து, அதை வெற்றிகரமான படமாக இயக்க முடியும் என நிரூபித்துள்ளார் சென்னா ஹெக்டே. அவரின் இந்த துணிச்சலான முடிவே, இன்று தேசிய விருதையும் வென்று கொடுத்துள்ளது. ஓடிடி ரசிகர்கள் தவறவிடக் கூடாத படம் 'திங்களச்ச நிச்சயம்.'

    English summary
    Do you know the story of the National Award-winning movie 'Thinkalazhcha Nishchayam.?’ (தேசிய விருது வென்ற திங்களச்ச நிச்சயம் படத்தின் கதை உங்களுக்கு தெரியுமா? )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X