twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உடல்நலக்குறைவு.. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மரணம்.. தேசிய விருது படங்களை தயாரித்தவர்!

    By
    |

    திருவனந்தபுரம்: பிரபல மலையாள தயாரிப்பாளர் குளத்தூர் பாஸ்கரன் நாயர் இன்று காலமானார்.

    மலையாள சினிமாவில் இப்போது வரை பேசப்படும் படங்களைத் தயாரித்தவர், குளத்தூர் பாஸ்கரன் நாயர். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்குனராக அறிமுகமான படம் ஸ்வயவரம். மது, சாரதா நடித்திருந்த இந்தப் படம் 1972 ஆம் ஆண்டு வெளியானது.

    Producer Kulathoor Bhaskaran Nair passes away

    இந்தப் படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்தன. இதை தயாரித்தவர் குளத்தூர் பாஸ்கரன் நாயர். புதிய அலை சினிமாவின் முன்னோடி படமாக இந்தப் படம் உள்ளது.

    இதையடுத்து கொடியேட்டம் என்ற படத்தைத் தயாரித்தார். இதையும் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். 1978 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது.

    முப்பதுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கி தயாரித்துள்ள இவர், கேரளாவில் திரைப்பட சொசைட்டியை உருவாக்கியவர். இவரும் அடூர் கோபாலகிருஷ்ணனும் சேர்ந்துதான் சித்ரலேகா என்ற பிலிம் சோசைட்டியை உருவாக்கினார். கேரள சினிமா ரசிகர்களின் ரசனையை மாற்றியதற்கு இந்த சொசைட்டியின் பங்கு முக்கியமானது.

    ரஜினி பட நடிகை கடற்கரையில் மேல் சாட்டை இல்லாமல் காத்து வாங்கும் போட்டோ வைரலாகி வருகிறது..ரஜினி பட நடிகை கடற்கரையில் மேல் சாட்டை இல்லாமல் காத்து வாங்கும் போட்டோ வைரலாகி வருகிறது..

    பின்னர் அடூரும் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். கடைசிவரை பிலிம் சொசைட்டியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த குளத்தூர் பாஸ்கரன் நாயர், திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார்.

    இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. அவர் மறைவை அடுத்து கேரள திரையுலகினரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

      English summary
      Kerala film Producer Kulathoor Bhaskaran Nair passes away
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X