கடந்த ஆண்டு தீபாவளிக்கு துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் வெளியானது. அந்த படம் வெளியாகி அடுத்த தீபாவளியே வரப்போகிறதே இன்னமும் துருவ் விக்ரமின் அடுத்த பட அறிவிப்பு வரவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு இன்று சூப்பரான செய்தி கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
நடிகர் துருவ் விக்ரமின் 4வது படத்தின் பூஜை இன்று கோலாகலமாக போடப்பட்ட நிலையில், அதன் போட்டோக்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் வெளியானது. அந்த படம் வெளியாகி அடுத்த தீபாவளியே வரப்போகிறதே இன்னமும் துருவ் விக்ரமின் அடுத்த பட அறிவிப்பு வரவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு இன்று சூப்பரான செய்தி கிடைத்துள்ளது.
புஷ்பா உள்ளிட்ட தெலுங்கு படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் குட் பேட் அக்லி, டியூட் படங்களை தயாரித்து வெற்றிக் கண்டது. இந்நிலையில், துருவ் விக்ரமின் 4வது படத்தையும் அந்த நிறுவனமே தயாரிக்க முன் வந்துள்ளது.
துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படத்தில் உதவி இயக்குநராக இருந்த கரண் ஏ. குமார் கருப்பு படத்திலும் ஆர்ஜே பாலாஜியுடன் எழுத்துப் பணிகளில் பணியாற்றி இருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
துருவ் விக்ரம் மற்றும் படக்குழுவுடன் இன்று பட பூஜை நடைபெற்றது. படத்தின் ஹீரோயின் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ப்ரீத்தி முகுந்தன் அல்லது கயாடு லோஹர் கமிட் ஆக வாய்ப்புகள் அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டியூட் படத்தில் மமிதா பைஜு நடித்த நிலையில், அவர் நடிப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு துருவ் விக்ரம் அடுத்து என்ன மாதிரியான கதையை தேர்வு செய்துள்ளார். படம் ஜாலியான கமர்ஷியல் படமாக இருக்குமா? அல்லது மறுபடியும் ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுப்பாரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.
டியூட் படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் தான் கிளாப் போர்ட் அடித்து படத்தை ஆரம்பித்து வைத்தார்.
குட் பேட் அக்லி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இன்று நடைபெற்ற பூஜையில் கலந்துக்கொண்டார்.