bredcrumb

காதுல ஜிமிக்கி.. தலையில மல்லிகைப்பூ.. குத்து விளக்கு போல ஜொலிக்கும் ஷிவானி இன்ஸ்டா போஸ்ட்!

By Jaya Devi
| Published: Wednesday, July 8, 2026, 12:29 [IST]
Shivani Narayanan instagram

Shivani Narayanan
1/6

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குச் சென்று சாதித்த பலரில், நடிகை ஷிவானி நாராயணன் மிகவும் முக்கியமானவர்.
Shivani Narayanan
2/6

அவர் படங்களில் நடித்துப் பிரபலமானதை விட, சமூக வலைத்தளங்களை மிகச் சரியாகப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ரசிகர்களைத் தன்வசப்படுத்திப் பிரபலமானார் என்பதுதான் நிஜம்.
Shivani Narayanan
3/6

'பகல் நிலவு' சீரியல் மூலம் முதன்முதலில் தமிழக இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்தார் ஷிவானி. பிக் பாஸ் வீட்டிற்குள் அவரது அமைதியான அணுகுமுறையும், நடனத் திறமையும் இளசுகள் மத்தியில் அவரைப் கொண்டு சேர்த்தது.
Shivani Narayanan
4/6

ஊரடங்கு சமயத்தில், தினமும் மாலை சரியாக நான்கு மணி ஆனவுடன் விதவிதமான உடைகளில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் ட்ரெண்டிங் பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
Shivani Narayanan
5/6

"4 மணி அட்டெண்டன்ஸ்" என்று நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்பட்ட இந்த உத்தி, அவருக்கு இன்ஸ்டாகிராமில் மளமளவென மில்லியன் கணக்கிலான ஃபாலோயர்களைப் பெற்றுத் தந்தது.
Shivani Narayanan
6/6

மாம்பழ மஞ்சள் மற்றும் பச்சைப் பட்டுப் புடவை, அதற்குப் பொருத்தமான பளபளக்கும் பச்சை நிற பிளவுஸ், கைகளில் பச்சை வளையல்கள், தலையில் மல்லிகைப்பூ மற்றும் காதுகளில் ஜிமிக்கி என அக்மார்க் தமிழ்நாட்டு மங்கையாக போஸ் கொடுத்துள்ளார்.
X