X
முகப்பு சினி தரவரிசை

வெற்றி வரிசையில் இடம்பெறாத சிறந்த காதல் தமிழ் திரைப்படங்கள்

Author Sakthi Harinath | Published: Saturday, March 11, 2023, 05:02 PM [IST]

தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதையில் பல திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவில் வெற்றிக்கண்டுள்ளது. இந்த பட்டியலில் சிறந்த காதல் படமாக உருவாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாமல் தோல்வியை கண்ட சில தமிழ் திரைப்படங்களின் பட்டியல் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் விஜய் சேதுபதியின் தர்மதுரை, காதலும் கடந்து போகும், ஜிவி பிரகாஷின் பேச்சிலர் என பல திரைப்படங்கள் உள்ளன. முழு விவரங்கள் இதோ.


cover image
Video Thumbnail

ஆதலால் காதல் செய்வீர்

ஆதலால் காதல் செய்வீர் - இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக இளம் நடிகர்களின் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படத்தின் பாடல்கள் நா முத்துக்குமார் பாடல் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. ஆனால் இத்திரைப்படம் விமர்சனம் ரீதியாக பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து, பிளாக்பஸ்டர் வரிசையில் இடம் பெறவில்லை. தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்க தவறிய சிறந்த காதல் கதையுள்ள திரைப்படமாகும், ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம்.

Video Thumbnail

காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும் - இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி, மணிகண்டன் என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். ஜனரஞ்சகமான திரைக்கதையில் இப்படம் உருவாகி தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டது. இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படும் இத்திரைப்படம், ரிலீஸான நேரத்தில் மக்களை கவர தவறியது. தமிழ் திரை ரசிகர்கள் திரையரங்கில் ரசிக்க தவறிய சிறந்த காதல் படமாகும், காதலும் கடந்து போகும்.

Video Thumbnail

7/ஜி ரெயின்போ காலனி

7 ஜி ரெயின்போ காலனி - இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணன், சோனியா அகர்வால் என பலர் நடித்திருக்கும் குடும்பம் மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படம் இன்றும் பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. ஆனால் இப்படம் ரிலீஸான நேரத்தில் ரசிகர்களை கவர தவறி தோல்வி அடைந்துள்ளது. இன்றும் பல நேர்காணலில் இப்படம் பற்றி இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார்.  

Video Thumbnail

சச்சின்

சச்சின் - இயக்குனர் ஜான் மஹேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இப்படம் ரிலீஸான 2005 ஆம் காலகட்டத்தில் இப்படம் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் தற்போது இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

Video Thumbnail

குட்டி

குட்டி - தெலுங்கு திரைப்பட 'ஆர்யா' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும். நகைச்சுவை காட்சிகள், பாடல்கள் என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம், ப்ளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பெற தவறியது. இன்று திரை ரசிகர்களால் பேசப்படும் இப்படம் அன்று தமிழ் சினிமாவில் பிளாப் ஆகியுள்ளது.

Video Thumbnail

பூ

இயக்குனர் சசி இயக்கத்தில் பார்வதி, ஸ்ரீகாந்த் என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம், பூ. இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. இப்படத்தின் இயக்குனரான சசி தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.

Video Thumbnail

தர்மதுரை

தர்மதுரை - இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ராதிகா சரத்குமார் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை மற்றும் காதல் காட்சிகள் இன்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு புகழ் பெற்றுள்ளது. ஆனால் இப்படம் ரிலீஸ் நேரத்தில் ரசிகர்களை கவரவில்லை. விஜய் சேதுபதியின் முக்கிய திரைப்படங்களில் இப்படமும் ஒன்றாகும்.

Video Thumbnail

பேச்சிலர்

அறிமுக இயக்குனர் சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ், திவ்யா பாரதி என பலர் நடித்திருக்கும் திரைப்படம், பேச்சிலர். இப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் தமிழ் சினிமாவில் செம ஹிட் அடித்துள்ளது. ஆனால் இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்துள்ளது. தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்படம், ரிலீஸ் நேரத்தில் பேசப்படவில்லை.

Video Thumbnail

ராமன் தேடிய சீதை

ராமன் தேடிய சிதை - இயக்குனர் கே.பி ஜெகன் இயக்கத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் உருவான காதல் திரைப்படம். இப்படத்தில் சேரன், பசுபதி விமலா ராமன் என பலர் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் சிறந்த காதல் திரைக்கதை உள்ள படமாக இப்படம் உருவாகினாலும், ரசிகர்களை பெரிய அளவில் கவர தவறியது. 2008 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் கதையின் உரிமை பெற்ற கன்னட சினிமா 2012 ஆம் ஆண்டு இப்படத்தினை ரீமேக் செய்துள்ளது.  

Video Thumbnail

லீலை

2012 ஆம் ஆண்டு இயக்குனர் அன்றெவ் லூயிஸ் இயக்கத்தில் சந்தானம், சுஹாசினி குமரன், ஷிவ் பண்டிட், மானசி என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சதீஸ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். சிறந்த காதல் படமாக இப்படம் உருவாகியிருந்தும் அறிமுக நடிகர்களின் நடிப்பில் இப்படம் உருவாகி தமிழ் திரைரசிகர்கள் மத்தியில் கொண்டாட தவறியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+