X
முகப்பு சினி தரவரிசை

இறைவன், விடுதலை முதல் அனிமல்: 2023ல் தமிழ் சினிமாவில் வெளியான 'ஏ' திரைப்படங்கள்

Author Sakthi Harinath | Published: Wednesday, December 27, 2023, 10:28 AM [IST]

2023ல் தமிழ் சினிமாவில் வெளியான 'ஏ' திரைப்படங்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கு விரிவாக உள்ளன. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு 2023ல் வெளியாகியுள்ள 'ஏ' சான்றிதழ் படங்கள் பற்றிய முழு விவரங்கள் உள்ளன. சலார், பயிட் கிளப், அனிமல், இறைவன் என பல படங்கள் உள்ளன. இதோ


cover image
Video Thumbnail

Salaar - சலார்

சலார் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை கே.ஜி.எஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.


அதிரடி படமாக உருவாகியுள்ள சலார் படத்திற்கு ஒளிப்பதிவாளர் புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கரனி எடிட்டிங் செய்துள்ளார். சலார் படம் ஒரு பேன் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகிறது.


சலார் படம் இரண்டு பாகங்கள் உடைய படமாக உருவாகி, முதற்கட்டமாக இப்படத்தின் முதல் பாகம் 2023 டிசம்பர் 22ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. 

Video Thumbnail

Fight Club - பைட் கிளப்

பைட் கிளப் - இயக்குனர் அப்பாஸ் ஏ ரக்மத் இயக்கத்தில் விஜய் குமார் நாயகனாக நடிக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆதி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த வசந்த் இசையமைத்துள்ளார்.


அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் க்ரிபாகரன் எடிட்டிங் செய்துள்ளார்.


பைட் கிளப் தமிழ் சினிமாவில் 2023 டிசம்பர் 15ல் வெளியாகியுள்ளது, இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.

Video Thumbnail

Animal - அனிமல்

அனிமல் - இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் என பல முன்னணி இந்தியா பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரிதம், விஷால் மிஷ்ரா, ஜானி, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் என பலர் இணைந்து இசையமைத்துள்ளனர்.


அனிமல் திரைப்படம் ஹிந்தி படமாக உருவாகி தமிழ், தெலுங்கு, கன்னட மலையாளம் என ஒரு பான் இந்தியா படமாக வெளியாகிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அமித் ராய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக இப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி எடிட்டிங் செய்துள்ளார்.


அனிமல் திரைப்படம் இந்திய முழுவதும் 'ஏ' சான்றிதழ் பெற்று 2023 டிசம்பர் 1ல் வெளியாகியுள்ளது.

Video Thumbnail

Iraivan - இறைவன்

இறைவன் இயக்குனர் அஹ்மத். ஐ  இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து பேஸ்சன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


கிரைம் - திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்தம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்துள்ளார்.


இறைவன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறை காட்சிகளுக்காக 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

Video Thumbnail

Viduthalai - விடுதலை

விடுதலை - தமிழ் சினிமா முக்கிய இயக்குனர்களில் ஒருவரான திரு. வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரி & தமிழ் திரைப்பட நடிகர் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜா இசையமைத்துள்ளார்.


எழுத்தாளர் திரு. ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற நாவல் கதையினை அடிப்படையாக அமைத்து உருவாக்கப்பட்டுள்ள விடுதலை திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆர் ராமர் எடிட்டிங் செய்துள்ளார். விடுதலை திரைப்படத்தில் பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜிவ் மேனன், கவுதம் மேனன் என பல தமிழ் திரைப்பட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.


விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வெளியாகிறது. முதல் பாகமான விடுதலை (பார்ட் 01) திரைப்படம் 2023, மார்ச் 31ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. விடுதலை திரைப்படத்தினை 'ஆர் எஸ் இன்போடைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.

Video Thumbnail

Pallu Padama Paathuka - பல்லு படாம பாத்துக்க

பல்லு படாம பாத்துக்க இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, ஷாரா, மொட்ட ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் அடல்ட் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+