இந்த தென்னிந்திய டாப் 5 நடிகைகள் இப்படித்தான் சினிமாவுக்குள் நுழைந்தார்களா? ஆச்சரிய தகவல்கள்

  விளம்பரங்களில் நடித்தும் மாடலிங் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் சமந்தா ரூத் பிரபு. இவர் கௌதம் மேனனின் ‘ஏ மாயா சேவ்’ (விண்ணைத் தாண்டி வருவாயா) படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா, இன்று தென்னிந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். சமந்தாவைப் போல தங்கள் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய 5 தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

  'லேடி சூப்பர் ஸ்டார்' என பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது திரைப்பயண ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்துள்ளார். பின் ராப்பகாள், விஸ்துமாயதும்பத் போன்ற மலையாள திரைப்படங்களின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்த நயன்தாரா, தமிழில் 'ஐயா' படத்தில் நடித்து அறிமுகமானார். பின் அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துவந்துள்ள நயன்தாரா 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் பெற்று தற்போது அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் உள்ளார்.

  மாடலிங் துறையில் பணியாற்றி 'மிஸ்' பட்டம் வென்றவர், திரிஷா கிருஷ்ணன். இவர் தமிழ் சினிமாவில் ஒரு துணைக் கலைஞராக பணியாற்றி தன் திரைப்பயணத்தை வெள்ளித்திரையில் தொடங்கியவர். இவரின் தொடக்ககால சினிமா வாழ்க்கையில் ரூ.500 சம்பளமாக பெற்றுள்ளார். பின்னர் சின்ன சின்ன வேடங்கள் மூலம் கவனிக்கப்பட்ட த்ரிஷா தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரானார்.

   

  மாடலிங் மூலம் வெள்ளித்திரைக்கு வந்துள்ள முக்கிய நட்சத்திரம் ஆவார், சமந்தா ரூத் பிரபு. இவர் ஆரம்ப காலத்தில் பல விளம்பர படங்களில் நடித்திருந்தார். பின்னர் கௌதம் மேனனின் ‘ஏ மாயா சேவ்’ (விண்ணைத் தாண்டி வருவாயா) படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா, இன்று தென்னிந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். 

  Complete: Samantha Biography

  மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் காஜல் அகர்வால். காஜல் 2004 ஆம் ஆண்டு 'கியூன் ஹோ கயா நா' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியா அதிக படங்களில் நடித்து தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரானார். இவருக்கு தென்னிந்திய சினிமாவில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். 

  1992ல் கமல்ஹாசன் நடித்த 'தேவர் மகன்' படத்தில் ஒரு பாடலைப் பாடி தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ருதிஹாசன். பின்னர், பள்ளிப் பருவத்திலேயே 2 ஹிந்திப் படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார். பாடகராக மட்டும் பணியாற்றி வந்துள்ள ஸ்ருதிஹாசன், பின்பு தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு , 3 படங்களில் நடித்து தன் திரைப்பயணத்தை நடிகையாக தொடங்கியுள்ளார்.

  Related Lists