மோனல் கஜ்ஜர்
Actress
பயோடேட்டா:
மோனல் கஜ்ஜர் , தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி என பல மொழி இந்திய திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஆவார். இவர் மிஸ்.குஜராத்தி பட்டம் வென்று திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ள இவர், ஒரு நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ் பெற்றுள்ளார். மோனல் கஜ்ஜர் அழகிய புகைப்படங்கள் மோனல் கஜ்ஜர் நடித்த தமிழ் திரைப்படங்கள் பிறப்பு மோனல் கஜ்ஜர் பிறப்பால் ஒரு குஜராத்தி ஆவார். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் பிறந்துள்ள இவர், அங்கே தனது கல்வியினை கற்று வணிகவியலில் இளங்கலை பட்டம் வென்றுள்ளார். தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர் ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த மோனல் கஜ்ஜர், தனது யோகா ஆசிரியர் அறிவுரைப்படி 2011 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற ரேடியோ மிர்ச்சி ஏற்பாடு செய்த "மிர்ச்சி ராணி தேனீ அழகி" என்ற அழகு / மாடலிங் போட்டியில் போட்டியாளராக பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளார். பின்னர் " மிஸ் குஜராத் " பட்டத்தையும் வென்றுள்ளார். திரையுலக அறிமுகம் மோனல் கஜ்ஜர், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ரேடியோ மிர்ச்சி அழகி போட்டி மற்றும் மாடலிங் போட்டிகளில் பங்குபெற்று "மிஸ் குஜராத்தி" பட்டம் வென்ற இவர், 2012-ஆம் ஆண்டு "சுடிகடு" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவரின் முதல் திரைப்படமான சுடிகடு என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மோனல் கஜ்ஜர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 2012-ஆம் ஆண்டு " சுடிகடு " என்ற தெலுங்கு திரைப்படத்திலும், 2013-ஆம் ஆண்டு " டிராகுலா 2012 " என்ற மலையாள படத்திலும், அதே ஆண்டு " மை " என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமாகியுள்ள இவர், தமிழ் திரையுலகில் " வானவராயன் வல்லவராயன் " மற்றும் " சிகரம் தொடு " என இரண்டு திரைப்படங்களில் 2014-ஆம் ஆண்டு நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் இவர் நடித்த வானவராயன் வல்லவராயன் மற்றும் சிகரம் தொடு ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றன. இந்த இரண்டு படங்களிலும் இவரது கதாபாத்திரம் நல்ல விமர்சனங்கள் பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது. இப்படங்களுக்கு பின்னர் இவர், குஜராத்தி, மராத்தி, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். பிக் பாஸ் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமான மோனல் கஜ்ஜர், வடஇந்திய மொழிகளான குஜராத்தி, மராத்தி, ஹிந்தி மொழி திரைப்படங்களில் முன்னனி முக்கிய நடிகையாக நடித்து வந்துள்ளார். பின் தென்னிந்தியாவில் தான் இழந்த முன்னணி நாயகிக்கான இடத்தினை மீண்டும் பிடிக்க இவர் 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கு பிக் பாஸ் - சிசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
மேலும் படிக்க