X
தமிழ் » திரைப்படங்கள் » சிகரம் தொடு
சிகரம் தொடு

சிகரம் தொடு

Action | Romance | 12 Sep 2014 | U |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

சிகரம் தொடு கதை

சிகரம் தொடு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த ஆக்ஸன் திரைப்படம் ஆகும். இதை கௌரவ் நாராயணன் இயக்கியுள்ளார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. விக்ரம் பிரபு, மனோல் கஜ்ஜார், சத்யராஜ், கே. எஸ். ரவிக்குமார் போன்றோர் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதை ஏடிஎம் (ATM)மூலம் பலருடைய போலி ஏடிஎம் கார்டு கொண்டு கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் அவர்களை பிடிக்கமுடியாமல் காவல்துறை திணறுகிறது. சிறந்த காவல்துறை அதிகாரியான செல்லப்பா (சத்யராஜ்) பணியின் போது தனது ஒரு காலை இழக்கிறார். இவர் தனது மகனான முரளிபாண்டியனை (விக்ரம் பிரபு) சிறந்த காவல்துறை அதிகாரி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் முரளி பாண்டியனுக்கோ காவல்துறை வேலை பிடிக்கவில்லை தான் வங்கியில் மேலாளர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட அவர், தன் தந்தையின் ஆசையை தட்டமுடியாமல் உள்ளார். இச்சமயத்தில்  தன் நண்பனுடன் வெளிமாநிலங்களுக்கு தன் தாத்தா மற்றும் பலருடன் குழு சுற்றுலா செல்கிறார். சுற்றுலாவுக்கு மருத்துவர் அம்புஜமும் (மனோல் கஜ்ஜார்) அவர் பாட்டி ஐஸ்வரியாவும் (கோவை சரளா) வருகின்றனர். அம்புஜத்திடம் காதல் கொள்ளும் முரளி பாண்டியன் அவரிடம் சுற்றுலா முடிவதற்குள் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று முயல்கிறார். முரளி பாண்டியன் பற்றி அம்புஜத்துக்கு நல்ல எண்ணம் இல்லை. சில நாட்களில் இருவரும் காதலர்கள் ஆகிவிடுகின்றனர். அம்புஜதிற்கும் காவல்துறை அதிகாரி மீது வெறுப்பு. அவர் காவல்துறை அதிகாரி தன் கணவனாக கூடாது என்று பிடிவாதமாக உள்ளார். சுற்றுலா முடித்து வீட்டுக்கு வரும் முரளி பாண்டியனுக்கு காவல் துறையில் சேர தபால் வந்துள்ளதை செல்லப்பா காட்டுகிறார். அதனால் தன் தந்தை சொல்லை தட்டமுடியாமல் காவல்துறை பயிற்சிக்கு சேர்கின்றார். ஆனால் தன் காதலியிடம் வங்கி வேலை காரணமாக சிம்லாவுக்கு செல்வதாக பொய் கூறுகின்றார். தான் பயிற்சியில் சரியாக செய்யாவிட்டால் தான் காவல்துறை வேலைக்கு தகுதியில்லை என்று கூறிவிடுவார்கள் அதனால் தந்தை சொல்லை கேட்டமாதிரியும் இருக்கும் தான் காவல்துறையில் சேரவும் வேண்டாம் என்று எண்ணுகிறார். காவல் துறை பயிற்சி மையத்தில் அதிகாரியின் வீட்டுக்கு செல்லும் முரளி பாண்டியன் அங்கு அம்புஜம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். அப்போது தான் அவர் அம்மைய அதிகாரியின் மகள் என்று தெரியவருகிறது. அதிகாரி, செல்லப்பா தன்னை காப்பாற்றியதால் தான் காலை இழந்தார் என்றும் ஒரு மாதம் முரளி பாண்டியன் காவல் துறையில் அதிகாரியாக வேலைசெய்யவேண்டும் எனவும் அதற்குப்பிறகும் அப்பணி பிடிக்கவில்லை என்றால் பணியிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்றும் பின் தான் செல்லப்பாவை  சமாதானம் செய்வதாகவும் கூறுகிறார். இதை ஏற்ற முரளி பாண்டியன் பயிற்சியில் சிறப்பாக தேறி காவல் துறை அதிகாரியாக பணியில் சேருகிறார்.  முரளி ஒரு மாத்திற்கு பிறகு காவல் துறையில் இருந்தாரா? அல்லது விலகினாரா?  அவரது காதல் கைகூடியதா? என்பது மீதிக்கதை.
Read More

சிகரம் தொடு நடிகர்கள் & படக்குழுவினர்

சிகரம் தொடு அணியின் தகவல்

இயக்குனர் கவுரவ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர், ரோன்னி ஸ்க்ரீவ்வாலா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சிகரம் தொடு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சிகரம் தொடு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+