X
முகப்பு » பிரபலங்கள் » நந்திதா ஸ்வேதா
நந்திதா ஸ்வேதா

நந்திதா ஸ்வேதா

Actress
பயோடேட்டா:  நந்திதா ஸ்வேதா , தென்னிந்திய திரைப்பட   நடிகையாகவும், வடிவழகியாகவும் பணியாற்றி பிரபலமானவர். இவர் 2008-ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் 2012-ஆம் ஆண்டு " அட்டகத்தி " என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் கன்னட, தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து ஒரு முக்கிய நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.   நந்திதா ஸ்வேதா பணியாற்றியுள்ள தமிழ் படங்களின் தொகுப்பு   நந்திதா ஸ்வேதா புகைப்படங்கள்   பிறப்பு   நந்திதா ஸ்வேதா , கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களுரில் பிறந்து வளந்துள்ளார் . இவரது தந்தை ஒரு பெரிய தொழிலதிபர் ஆவார் . இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் பல்கலைக்கழக கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார் . இவருக்கு இரண்டு தமையன்கள் உள்ளனர் .   திரைப்பயணம்   நந்திதா ஸ்வேதா கர்நாடகாவில் தனது கல்வி படிப்பினை முடித்த பின்னர் வி . ஜே வாக " உதயா  மியூசிக் " என்ற கன்னட மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார் . பின் தனது நண்பர்களுடன் இணைந்து இவர் மாடல்லிங் துறையில் பங்களித்து பல போட்டிகளில் பங்கு பெற்று வந்துள்ளார் . அதன் வாயிலாக திரையுலக அறிமுகங்கள் பெற்றுள்ள இவர் , திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பினை பெற்று கன்னட திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார் .   நந்திதா ஸ்வேதா 2008- ஆம் ஆண்டு " நந்தா லவ்ஸ் நந்திதா " என்ற கன்னட திரைப்படத்தில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார் . இப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள " நந்திதா " என்ற கதாபாத்திரம் இவரை பெரும் அளவில் கவர்ந்துள்ளது . கன்னட திரையுலகில் இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பிரபலமானதை தொடர்ந்து இவர் தனது திரைப்பெயராக " நந்திதா ஸ்வேதா "  திரையுலகில் அறிவித்துள்ளார்.   இவரது இரண்டாவது திரைப்படமாக 2012- ஆம் ஆண்டு இயக்குனர் பா . ரஞ்சித் இயக்கிய " அட்டகத்தி " திரைப்படம் அமைந்துள்ளது . இப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது . இப்படமே தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படமாகும் . பிரபலம் அட்டகத்தி படத்தினை தொடர்ந்து நந்திதா ஸ்வேதா தமிழில் ஆண்டு எதிர்நீச்சல் , இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படங்கள் இவருக்கு ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது .   தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து பிரபலமான இவர் , நடிகர் விஜய்யின் " புலி " திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் புகழ் பெற்றுள்ளார் .   தமிழ் திரையுலகில் பணியாற்றி ஒரு முக்கிய முன்னணி நடிகையாக பிரபலமான இவர் , 2016- ஆம் ஆண்டு " இக்கடிக்கி பொதுவு சின்னவட " என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார் . இப்படத்தில் நடித்தற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதினை " பிலிம்பேர் விருது " குழு   இவர்க்கு   விருதினை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க

நந்திதா ஸ்வேதா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
செல்வா Feb 2026
சீனு ராமசாமி Dec 2025
ஷெரிப் 23 Feb 2024
சி எஸ் அமுதன் 06 Oct 2023

நந்திதா ஸ்வேதா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

நந்திதா ஸ்வேதா

பெயர் நந்திதா ஸ்வேதா
பிறந்த தேதி 30 Apr 1993
வயது 33
பிறந்த இடம் Karnataka
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

நந்திதா ஸ்வேதா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

நந்திதா ஸ்வேதா பிரபலம்

நந்திதா ஸ்வேதா புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+