Don't Miss!
- Technology
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- News
சுப்ரீம் கோர்ட் போட்ட புதிய உத்தரவு.. கையை பிசையும் ஓபிஎஸ்.. சென்னையில் திடீர் ஆலொசனை!
- Sports
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு டிராவிட் தந்த கவுரவம்.. இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ரத்தம் படத்தில் நந்திதாவின் கதாபாத்திரத்தின் பெயர் இதுதான்!
சென்னை : தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நந்திதா ஸ்வேதா
சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த ஈஸ்வரன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருப்பார்
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நந்திதா இப்பொழுது விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்க அதில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது
கமல்ஹாசன் என்னை பாராட்டவே இல்ல.. கண்டிப்பா விருது வாங்குவேன்..நடிகை லிசி எக்ஸ்குளூசிவ்!

ஹோம்லி முகம்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டகத்தியில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஹோம்லி முகம், கவர்ச்சி காட்டாத நடிப்பு என தமிழ் சினிமாவில் ஆரம்பமே அதிரடியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர்.

கிராமத்து பெண்ணாக
அட்டகத்தி வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றார் அதைத் தொடர்ந்து ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்றவர். அதன் பிறகு நந்திதா நடித்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை

நெகட்டிவ் ரோலில்
இந்த நிலையில் சிம்பு சுசீந்திரன் கூட்டணியில் வெளியான ஈஸ்வரன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். ஹீரோயினியாக இல்லை என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்கள் என்றால் துணிந்து நடித்து வரும் நந்திதா ஸ்வேதா முதல் முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா சைக்கோவாக நடித்த இந்த படத்தில் வில்லியாக நந்திதா ஸ்வேதா நடித்து அசத்தியிருப்பார்.

ரத்தம்
இந்த நிலையில் தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2 ஆகிய படங்களை இயக்கிய சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் திரைப்படத்திற்கு ரத்தம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ரத்தம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் கலக்கியது. படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மது
பொதுவாக விஜய் ஆண்டனி திரைப்படங்கள் என்றாலே மிகவும் வித்தியாசமாக இருக்கும் அதே போல இந்த படத்திலும் வித்தியாசமான கதை மட்டுமல்லாமல் மூன்று ஹீரோயின்கள் இதில் நடித்து வருகின்றனர். நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார் என மூன்று ஹீரோயின்களில் நடித்து வருகின்றனர். இதில் நந்திதா ஸ்வேதாவின் கதாபாத்திரத்தின் பெயர் மது என வைக்கப்பட்டுள்ளது. தைரியமான துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நந்திதா நடித்து வருகிறார்.