ஆண் தேவதை இயக்குனர் தாமிரா இயக்கத்தில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு கிப்ரான் இசையமைக்கிறார்.
கதை :
மேல்தட்டு மக்களைப் போல் வாழவும் முடியாமல், கீழ்த்தட்டு மக்களைப் போல் அனுசரித்துச் செல்லவும் இயலாமல் தவிப்பது தான் பெரும்பாலும் நடுத்தர குடும்பங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இதற்காக அவர்கள் கொடுக்கும் விலை அதிகமானது. இது தான் ஆண் தேவதை படத்தின் கதைக்களம்.
மெடிக்கல் ரெப் இளங்கோ (சமுத்திரக்கனி), ஐடி ஊழியர் ஜெஸ்ஸிகா (ரம்யா பாண்டியன்) தம்பதிக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரட்டை குழந்தைகள். கை நிறையச் சம்பளம், வீடு, கார் என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார் ரம்யா. இதனால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன் வேலையை ராஜினாமா செய்கிறார் சமுத்திரக்கனி. ஆனால், கடன் கழுத்தை நெரிக்க குடும்பத்தில் பிரச்சினை முளைக்கிறது. இதனால் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் சமுத்திரக்கனி. ரம்யா மனம் மாறினாரா, பிரச்சினைகள் தீர்ந்ததா, மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதே மீதிக்கதை.