X
ஆண் தேவதை

ஆண் தேவதை

Drama | 12 Oct 2018 |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

ஆண் தேவதை கதை

ஆண் தேவதை இயக்குனர் தாமிரா இயக்கத்தில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு கிப்ரான் இசையமைக்கிறார்.  கதை :  மேல்தட்டு மக்களைப் போல் வாழவும் முடியாமல், கீழ்த்தட்டு மக்களைப் போல் அனுசரித்துச் செல்லவும் இயலாமல் தவிப்பது தான் பெரும்பாலும் நடுத்தர குடும்பங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இதற்காக அவர்கள் கொடுக்கும் விலை அதிகமானது. இது தான் ஆண் தேவதை படத்தின் கதைக்களம். மெடிக்கல் ரெப் இளங்கோ (சமுத்திரக்கனி), ஐடி ஊழியர் ஜெஸ்ஸிகா (ரம்யா பாண்டியன்) தம்பதிக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரட்டை குழந்தைகள். கை நிறையச் சம்பளம், வீடு, கார் என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார் ரம்யா. இதனால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன் வேலையை ராஜினாமா செய்கிறார் சமுத்திரக்கனி. ஆனால், கடன் கழுத்தை நெரிக்க குடும்பத்தில் பிரச்சினை முளைக்கிறது. இதனால் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் சமுத்திரக்கனி. ரம்யா மனம் மாறினாரா, பிரச்சினைகள் தீர்ந்ததா, மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதே மீதிக்கதை.
Read More

ஆண் தேவதை நடிகர்கள் & படக்குழுவினர்

ஆண் தேவதை அணியின் தகவல்

இயக்குனர் தாமிரா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஆண் தேவதை விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
காட்சிக்கு காட்சி அட்வைஸ் மழை பொழியும் நாயகன் கதாபாத்திரம் கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. ஏற்கனவே முந்தைய நிறைய படங்களில் சமுத்திரக்கனியை இதே போன்ற கருத்துக் கந்தசாமி கதாபாத்திரத்தில் பார்த்திருப்பதால் இளங்கோவின் வசனங்கள் பல இடங்களில் மனதைத் தொடவில்லை. சமுத்திரக்கனி வரும் காட்சிகளில் எல்லாம், 'அய்யய்யோ இப்போ என்ன பேசப் போகிறாரோ?' என்ற பீதியே உருவாகிறது. ஆனால் இதுவும் பழைய விசயம் தான் என்றாலும், வழக்கம்போல் பொறுப்பான தந்தையாக பாராட்டுகளை அள்ளுகிறார், 'சபாஷ்'கனி. 'ஜோக்கர்' படத்துக்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரம். ஆதிராவாக வரும் பேபி மோனிகாவும், அகர முதல்வனாக வரும் மாஸ்டர் கவின் பூபதியும் ரசிக்க வைக்கிறார்கள். பிக் பாஸ் புகழ் சுஜா வருணி, எப்படியெல்லாம் ஆடம்பரமாக வாழக்கூடாது என வாழ்ந்து காட்டியிருக்கிறார். இவர்கள் தவிர ராதாரவி, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, இளவரசு, அனுபமா, அறந்தாங்கி நிஷா என அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் பொறுப்பு, தேவையில்லாத ஈகோ, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், பணிபுரியும் இடத்தில் பாலியல் சீண்டல், கடன் தொல்லை என படத்தில் நிறைய நல்ல கருத்துகளை தேவையான அளவுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதற்காக நிச்சயம் இயக்குநரைப் பாராட்டலாம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வருமானத்திற்கு ஏற்ப சிக்கனமாக வாழ்ந்தால் குடும்பம் சிறக்கும் என்பதை இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம். தொலைக்காட்சி சீரியல்களே படுவிறுவிறுப்பாக மாறிவிட்ட இன்றைய சூழலில், பழைய மெகா சீரியல் பாணி திரைக்கதை அலுப்பை ஏற்படுத்திவிடுகிறது. பெருநகர கார்ப்பரேட் கலாச்சாரப் பாதிப்பை பேசியிருக்கும் இந்த 'ஆண் தேவதை' நமக்கு அட்வைஸ் வரம் அளிக்கிறான்.

ஆண் தேவதை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஆண் தேவதை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+