»   »  சமுத்திரக்கனி நடிக்கும் ஆண் தேவதை... இது பாலச்சந்தருக்கு சமர்ப்பணம்!

சமுத்திரக்கனி நடிக்கும் ஆண் தேவதை... இது பாலச்சந்தருக்கு சமர்ப்பணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ராஜ்கிரணுக்கு இருந்த மரியாதையும் டிமாண்டும் (இப்போதும் அது குறையவில்லைதான்) இப்போது சமுத்திரக்கனிக்கு!

அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அடுத்து நடிக்கும் புதுப்படத்துக்கு ஆண் தேவதை எனப் பெயரிட்டுள்ளனர்.

Samuthirakkani in Aan Devathai

பெண்தானே தேவதை? இது என்ன 'ஆண் தேவதை'?

இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை.

"இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்ஒர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது.

Samuthirakkani in Aan Devathai

இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.

ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்து​ச் செல்கிறது என்பதையும் படம் உணரவைக்கும்," என்கிறார் படத்தை இயக்கும் தாமிரா.

இவர் பாலச்சந்தரின் தீவிர மாணவர். பாலச்சந்தரையும் பாரதிராஜாவையும் இணைத்து ரெட்டச்சுழி படத்தை இயக்கியவர்.

'ஆண் தேவதை'யில் சமுத்திரக்கனியுடன், ரம்யாபாண்டியன், கவின், கஸ்தூரி, 'பூ' ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா​,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் ​மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Samuthirakkani in Aan Devathai

'இயக்குநர் சிகரம்' பாலச்சந்தரிடம் கொண்ட அன்பின், மதிப்பின் அடையாளமாக அவரது நினைவாக 'சிகரம் சினிமாஸ்' என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து, ​ஃபக்ருதீனுடன் இணைந்து தயாரிக்கிறார் தாமிரா. இப்படத்தைத் தன் குருநாதருக்கு சமர்ப்பணமாக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.,

சற்றே இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கை கோர்த்துள்ளார் தாமிரா.

English summary
Samuthirakkani is playing lead role in Thamira directed Aan Devathai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X