அபியும் அனுவும் கதை

  அபியும் அனுவும் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோகிணி, சுஹாசினி, பிரபு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் காதல்  திரைப்படம். இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத, தரன் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  கதை :

  படத்தின் தலைப்பிலேயே இது உண்மை சம்பவத்தில் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என சொல்லிவிடுகிறார்கள். ரிமோட்டில் இருப்பது போல் வாழ்விலும் ஒரு ரீவைன்ட் பட்டன் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஹீரோ அபி என்கிற அபிமன்யுவின் (டோவினோ தாமஸ்) வசனத்துடன் தொடங்குகிறது படம். பின் நம்மை பிளாஷ் பேக்குக்கு அழைத்து செல்கிறார்கள். ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில், பொறியாளராக வேலை பார்க்கும் இளைஞன் அபி. அம்மா, அப்பா வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கும் சுற்றித் திரிவதால், சிறு வயதில் இருந்தே ஹாஸ்டல் வாழ்க்கை வாழ்பவன்.

  மேட்டுப்பாளையத்தில் சுதந்திர பறவையாக வாழும் இளம்பெண் அனு(பியா பாஜ்பாய்). சமூக அக்கறையுடன் ஃபேஸ்புக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். புற்றுநோயாளிக்களுக்காக மொட்டை அடித்து, அந்த வீடியோவையும் ஃபேக்ஸ்புக்கில் அப்லோட் செய்ய, அனுவின் மீது அபிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. 

  ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், வீடியோ காலிங் என இருவரும் நெருக்கமாகிறார்கள். முதல் சந்திப்பிலேயே திருமணமும் செய்துகொள்கிறார்கள். இதனை அபியின் பெற்றோர், வீடியோ காலிங் வழியே பார்த்து வாழ்த்தவும் செய்கிறார்கள். அந்த கொடுப்பனையும் அனுவின் தாய்க்கு (ரோகினி) கிடைக்கவில்லை. காதலர்கள் இருவரும் கணவன் - மனைவியாகி, சென்னையில் சந்தோஷமாக வாழ்வை தொடர்கிறார்கள். அனுவும் கற்பமானதும் தலைக்கால் புரியாமல் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதக்கிறார்கள் கணவனும், மனைவியும். வாழ்வைப் பற்றி பல்வேறு திட்டங்களை இருவரும் வகுத்து வரும் சூழலில் அந்த உண்மை தெரியவருகிறது. இருவரின் வாழ்வும் சூன்யமாகிறது. அந்த உண்மை தெரிந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பது தான் மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie அபியும் அனுவும் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).