அக்யூஸ்ட் நம்பர் 1 (A 1) இயக்குனர் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மேலும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில், எடிட்டர் லியோ ஜான் பால் எடிட்டிங் செய்துள்ளார்.
கதை
சென்னையில் உள்ள ஒரு லோக்கல் ஏரியாவில் வேலையில்லாமல் ஜாலியாக சுற்றித்திரியும் இப்படத்தின் நாயகன் சந்தானம். இவர் சில லோக்கல் ரௌடிகளால் சூழப்பட்டு தவிக்கும் இப்படத்தின் நாயகி தாரா-வை ரௌடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்.
உடனே சந்தனத்தின் மீது காதல் வசைபடும் நாயகி, இவர் லோக்கல் என்று அறிந்ததும் இவரை விட்டு பிரிகிறார். பின் ஒரு நாள் தாரா-வின் தந்தை ரோட்டில் உயிருக்கு போராடும் சமயத்தில் அவருக்கு உதவுகிறார் சந்தானம். பின்னர் இவரின் மேல் மீண்டும் காதலில் விழும் நாயகி, இவரை கரம் பிடிக்க துடிக்கிறார்.
ஒரு அங்கரகாலத்து பெண்ணாக இருக்கும் தாரா, ஒரு லோக்கல் இளைஞரை காதலிப்பது பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் இவர்களை பிரிக்கின்றனர், இதனால் மது அருந்தும் சந்தானம், எதிர்பாராமல் தனது நண்பர்களால் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். பின் அதிலிருந்து இவர் தப்புவதே இப்படத்தின் கதை.