twitter

    அந்தகாரம் கதை

    அந்தகாரம் இயக்குனர் வி.விக்னராஜன் இயக்கத்தில், பிரபல தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர் அட்லீ தயாரிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், மிஷா கோஷல், பூஜா ராமசந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 2020 ஏப்ரல் 11ல் இணையத்தில் வெளியானது.

    திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையில், ஒளிப்பதிவாளர் எட்வின் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் அட்லீ தயாரித்து, 'நெட்பிலிக்ஸ்' என்னும் ஆன்லைன் ஓடிடியில் 2020 நவம்பர் 24ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

    அந்தகாரம் திரைப்படத்தின் கதை

    அர்ஜுன் தாஸ் பிரபல கிரிக்கெட் வீரர், இவர் குழந்தைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். தனது காதலி மிஷா கோஷலுடன் ஒரு அமைதியான வாழ்க்கை வாழந்து வருகிறார். அர்ஜுன் தாஸ் வீட்டில் உள்ள அவரின் லேண்ட்லைன் நம்பருக்கு முகம் தெரியாத நபர் ஒரு அழைக்கிறார். அவர் அர்ஜுன் தாஸ் பற்றிய ஒரு ரகசியத்தை கூறி இவரை பயமுடுத்துகிறார். இதனால் அமைதியாக சென்ற அர்ஜுன் தாஸ் வாழ்க்கை நரகமாகிறது.

    இல்லத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் அனுபவிக்கும் கஷ்டங்களை காணும் காதலி மிஷா கோஷல், அவரை ஒரு மனநல மருத்துவருடன் கலந்தாய்வு செய்ய பரிந்துரைக்கிறார். தனது காதலியின் அறிவுரை ஏற்று தனது நண்பனின் தங்கை பூஜா ராமசந்திரன் மூலம் ஒரு மனநல மருத்துவரை அர்ஜுன் தாஸ் அணுகுகிறார்.

    செல்வம் (வினோத் கிஷன்) கண் பார்வை இல்லாமல் இறந்து போன ஆன்மாக்களுடன் பேசும் திறன் பெற்றவர். இவர் ஒரு நூலகத்தில் பணியாற்றுகிறார்.

    இத்திரைப்படமானது அர்ஜுன் தாஸ், மனநல மருத்துவர், வினோத் கிஷன் இவர்களின் வாழக்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. வெவ்வேறு பாதைகளில் தனக்கென ஒரு அடையாளத்துடன் வாழும் இவர்களை இணைக்கும் அந்த சம்பவம் என்ன? என்பதே அந்தகாரம் படத்தின் திரில்லர் திரைக்கதை.

    **Note:Hey! Would you like to share the story of the movie அந்தகாரம் with us? Please send it to us ([email protected]).