அஞ்சாமை - இயக்குனர் எஸ் பி சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், ரஹ்மான், வாணி போஜன் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் திருநாவுக்கரசு தனது 'திருச்சித்ரம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.
குடும்ப படமாக உருவாகியுள்ள 'அஞ்சாமை' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ராமசுதர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார்.
அஞ்சாமை திரைப்படம் 2024 ஜூன் 7ல் திரையரங்கில் வெளியான நிலையில், இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.
அஞ்சாமை திரைப்படத்தின் கதை
திண்டுக்கல் மாவட்டத்தில் எளிமையான குடும்பத்தில் வாழும் நடிகர் விதார்த், தனது மகனை டாக்டர் ஆக்க ஆசைப்படுகிறார். விதார்த் மகன் 10 ஆம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறுகிறார், இவரது மருத்துவ கனவிற்கு நீட் எழுதி பாஸ் ஆக வேண்டும் என்னும் நிர்பந்தத்தை அரசு புதிய சட்டமாக கொண்டு வருகிறது. இதனால் இவரது குடும்பம் சந்தித்த இன்னல்கள், பொருளாதார ரீதியில் சிக்கும் விதார்த் குடும்பம் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறது என்பதே இப்படத்தின் கதை.