X
தமிழ் » திரைப்படங்கள் » அண்ணனுக்கு ஜே (2018)
அண்ணனுக்கு ஜே

அண்ணனுக்கு ஜே

Action | Comedy | Drama | 31 Aug 2018 |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

அண்ணனுக்கு ஜே கதை

அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ், மஹிமா நம்பியார் நடித்த அரசியல் வஞ்சப்புகழ்ச்சி சார்ந்த திரைப்படம்.  கதை : அப்பா முருகேசனுடன் (மயில்சாமி) சேர்ந்து கள் இறக்கும் தொழில் செய்து வருகிறார் மட்ட சேகர் (தினேஷ்). கட்டிங் சரக்குக்கு மேல் நடித்தாலே மட்டையாகிவிடுவார் என்பதால் தான் சேருக்கு இந்த அடைமொழி. மட்ட சேகரின் காதலியாக சுந்தரி (மஹிமா). இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், உள்ளூர் அரசியல் பிரமுகரான செல்வா (ஸ்டன்ட் தீனா) மட்ட சேகருக்கு வில்லான வருகிறார். முருகேசனின் கள்ளுக்கு அதிக மவுசு இருப்பதால், செல்வாவின் டாஸ்மாக் பார் கல்லாகட்டாமல் திணறுகிறது. இதனால் கடுப்பாகும் செல்வா, முருகேசனை போலீசில் போட்டுக்கொடுக்கிறார். முருகேசனை போலீஸ் அடிவெளுக்க, செல்வாவின் எதிர்கோஷ்டியை சேர்ந்த அரசியல்வாதி பரசுராமன் (ராதாரவி) மூலம் அப்பாவுக்கு கட்சிப் போஸ்டிங் வாங்க அரசியல் களம் காண்கிறார் மட்ட சேகர். அரசியலில் அவர் சாதித்தாரா இல்லை மட்டையானாரா என்பதை நக்கலும் நையாண்டியுமாக சொல்கிறது அண்ணனுக்கு ஜே.
Read More

அண்ணனுக்கு ஜே நடிகர்கள் & படக்குழுவினர்

அண்ணனுக்கு ஜே அணியின் தகவல்

இயக்குனர் ராஜ்குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அரோள் கரோலி
தயாரிப்பாளர் வெற்றிமாறன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அண்ணனுக்கு ஜே விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
மட்ட சேகர் பாத்திரத்தை நிதானம் தவறாமல் செய்திருக்கிறார் தினேஷ். அட்டக்கத்தி ரூட்டு தல இப்போ நாட்டுக்கே தல என்று கெத்து காட்டியிருக்கிறார். சீரியசாக அவர் செய்யும் காமெடிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. சவுண்டு கொடுத்தே எதிரிகளை ஓடவிடுவது, நெஞ்சை நிமிர்த்தி பார்வையிலேயே அசால்ட் செய்வது என கலக்கியிருக்கிறார். குறிப்பாக 'குக்கூ' பாதிப்பில் இருந்து பெருமளவுக்கு வெளியே வந்துவிட்டார். அடாவடி காதலி சுந்தரியா ரசிக்க வைக்கிறார் மஹிமா. டல் மேக்கப்பிலும் அழகாகவே தெரிகிறார். பெரிதாக வேலை ஏதும் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்திருக்கிறார். நமது அரசியல் அமைப்பை நச்சென கலாய்க்கும் விதத்தில் பர்ஸ்ட் கிளாஸில் பாசாகியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். அடிமட்ட தொண்டர்களை அரசியல் தலைவர்கள் எப்படி தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை நன்றாகவே நையாண்டி செய்திருக்கிறார். 'டாஸ்மாக்கை மூடி கள்ளுக்கடைகளை திறங்க' எனும் பிரச்சாரத்தை, பிரச்சாரமாக இல்லாமல் காட்சிகளின் மூலம் கடத்துகிறார் இயக்குனர். பாராட்டுக்கள் ராஜ்குமார். அரோல் குரேலியின் இசையில் மட்ட சேகரு பிஜிம் மட்டும் அதிர வைக்கிறது. மற்றபடி பாடல் எல்லாம் சுமார் ரகம். ஒரு ஊரை சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமியின் கேமரா. எடிட்டர் ஜி.பி.வெங்கடேஷ் தனது பணியை செம்மையாக செய்திருக்கிறார்.

அண்ணனுக்கு ஜே திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அண்ணனுக்கு ஜே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+