அரண்மனை 2 தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க, சித்தார்த், த்ரிஷா, ஹன்ஷிகா மோத்வாணி, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கதை :
கதை கோவிலூரில் உள்ள அம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகளில் ஆரம்பிக்கின்றது. அவ்வூர் பெரியவர் ராதாரவி தன் மகன் சித்தார்த் மற்றும் த்ரிஷாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்கின்றார். அச்சமயம் ராதாரவியை ஒரு ஆவி தாக்கி கோமாவிற்கு செல்கிறார். அதன் பின்பு ராஜ் கப்பூரை தாக்குகின்றது. அதனை கண்டறிய சுந்தர் சி வீடு முழுவதும் கேமிராவினை பொருத்துகின்றார்.
ஒரு கட்டத்தில் அந்த ஆவி சித்தார்த்தின் அண்ணனான சுப்பு பஞ்சுவை அடித்து இழுத்து செல்லும் காட்சி கேமிராவில் பதிவாக, அதனை ஜூம் செய்து பார்க்கும் பொது அந்த ஆவி ஹன்ஷிகா என தெரிய வருகிறது. ஹன்ஷிகா எவ்வாறு ஆவி ஆனார்? அதன் பின்னணி என்ன? அதற்கும் சித்தார்த் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? என்பதே மீதிக்கதை.