X
அரண்மனை 2

அரண்மனை 2

Horror | 29 Jan 2016 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

அரண்மனை 2 கதை

அரண்மனை 2 தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க, சித்தார்த், த்ரிஷா, ஹன்ஷிகா மோத்வாணி, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கதை : கதை கோவிலூரில் உள்ள அம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகளில் ஆரம்பிக்கின்றது. அவ்வூர் பெரியவர் ராதாரவி தன் மகன் சித்தார்த் மற்றும் த்ரிஷாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்கின்றார். அச்சமயம் ராதாரவியை ஒரு ஆவி தாக்கி கோமாவிற்கு செல்கிறார். அதன் பின்பு ராஜ் கப்பூரை தாக்குகின்றது. அதனை கண்டறிய சுந்தர் சி வீடு முழுவதும் கேமிராவினை பொருத்துகின்றார்.  ஒரு கட்டத்தில் அந்த ஆவி சித்தார்த்தின் அண்ணனான சுப்பு பஞ்சுவை அடித்து இழுத்து செல்லும் காட்சி கேமிராவில் பதிவாக, அதனை ஜூம் செய்து பார்க்கும் பொது அந்த ஆவி ஹன்ஷிகா என தெரிய வருகிறது. ஹன்ஷிகா எவ்வாறு ஆவி ஆனார்? அதன் பின்னணி என்ன? அதற்கும் சித்தார்த் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? என்பதே மீதிக்கதை.
Read More

அரண்மனை 2 நடிகர்கள் & படக்குழுவினர்

அரண்மனை 2 அணியின் தகவல்

இயக்குனர் சுந்தர் சி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அரண்மனை 2 விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஏற்கெனவே ஹிட்டடித்த ஒரு பேய்ப் படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்க என்ன தேவை? அந்தப் படத்தின் டெம்ப்ளேட்டுக்குள் பொருந்துகிற மாதிரி சில பேய்கள், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் த்ரில் கிராபிக்ஸ்... இவற்றை சுவாரஸ்யமாக கோர்க்கத் தெரிந்த சாமர்த்தியம். ராகவா லாரன்ஸ் மாதிரியே, இந்த விஷயத்தில் சுந்தர் சியும் கில்லாடிதான். சித்தார்த்துக்கு பெரிய ஸ்கோப்பில்லாத வேடம். ஏற்ற வேடத்துக்கேற்ப நன்றாகவே பயந்திருக்கிறார். முதல் முறை கவர்ச்சிப் பேயாக வரும் த்ரிஷாவும் குறை வைக்கவில்லை. ஹன்சிகாவுக்கென்றே வடிவமைத்த வேடம் போலிக்கிறது. அழுத்தமான வேடம். மனதில் நிற்கிற மாதிரி நடித்துள்ளார். அவருக்கான அந்த அறிமுகப் பாட்டு சூப்பர். பூனம் பாஜ்வாவையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் சுந்தர். பார்த்த, பழகிய கதை என்ற ஒன்றைத் தவிர, குறை சொல்ல ஏதுமில்லை. ஜாலியாகப் பொழுது போகிறது. அது போதாதா!

அரண்மனை 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அரண்மனை 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+