»   »  அரண்மனை, அரண்மனை 2 இந்த 2 படத்துக்கும் ஒரு வித்தியாசமாவது கண்டுபிடிங்க பாக்கலாம்

அரண்மனை, அரண்மனை 2 இந்த 2 படத்துக்கும் ஒரு வித்தியாசமாவது கண்டுபிடிங்க பாக்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மாசம் வெளியான அரண்மனை 2 படத்தைப் பார்த்தவங்க எல்லோரும் கொஞ்ச நாள் குழப்பத்தோடவே திரிஞ்சாங்க.

காரணம் என்னன்னு விசாரிச்சா அரண்மனை படத்துல நடிக, நடிகையர மட்டும் மாத்திட்டு சுந்தர்.சி திரும்பவும் அதே படத்த ரீமேக் பண்ணது தான் இந்த குழப்பத்துக்கு காரணமாம்.


இதுக்கு நடுவுல அரண்மனை 2 படத்த தடை செய்யணும்னு நீதிமன்றப் படியேறினாரு பழம்பெரும் தயாரிப்பாளர் முத்துராமன். இதை விசாரிச்ச நீதிபதி ரெண்டு பேரும் அப்படி ஓரமாப் போய் சமாதானம் செஞ்சுக்கங்கனு சொல்லிட்டாரு.


சரி நாம அரண்மனை 3 வேற எடுக்கப் போறோம் வம்பு எதுக்குன்னு அவருக்கு 10 லட்சம் கொடுத்து வழக்கை சமரசமா முடிச்சிருக்காரு சுந்தர்.சி


அரண்மனை - அரண்மனை 2

அரண்மனை - அரண்மனை 2

கடந்த 2014ம் வருஷம் சுந்தர்.சி, வினய், சந்தானம், ஆண்ட்ரியா, ஹன்சிகா, லட்சுமி ராய், மனோபாலா, கோவை சரளா நடிப்புல வெளியான படம் அரண்மனை.போன மாசம் வெளியான அரண்மனை 2 படத்துல சுந்தர்.சி, த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி , கோவை சரளா, மனோபாலா நடிச்சிருந்தாங்க.


சித்தார்த்- வினய்

சித்தார்த்- வினய்

அரண்மனை படத்துல வினய், ஆண்ட்ரியாவோட கணவனா நடிச்சிருந்தார். அரண்மனை 2 வுல சித்தார்த் த்ரிஷாவோட காதலனா நடிச்சிருக்காரு.


சந்தானத்திற்கு பதிலா சூரி

சந்தானத்திற்கு பதிலா சூரி

அரண்மனை படத்துல சந்தானம் காமெடி பண்ணியிருப்பாரு. அரண்மனை 2வுல சந்தானத்திற்குப் பதிலா சூரி காமெடி பண்ணியிருக்கார்.


3 ஹீரோயின்கள்

3 ஹீரோயின்கள்

முதல் பாகத்துல ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, ஹன்சிகான்னு 3 ஹீரோயின். இதுல த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வானு அதே 3 ஹீரோயின் செண்டிமெண்ட் தான். என்ன முதல் பாகத்துல நடிச்ச ஹன்சிகாவை மட்டும் இந்தப் படத்துல கொஞ்ச நேரம் பார்க்கலாம்.


முட்டை, எலுமிச்சம்பழம்

முட்டை, எலுமிச்சம்பழம்

அரண்மனை படத்துல பேய் யாரோட உடம்புல புகுந்துருக்குனு மந்திரிச்ச முட்டையை வச்சு சுந்தர்.சி கண்டுபிடிப்பார். இந்தப் படத்துல எலுமிச்சம்பழம் வச்சு கண்டுபிடிக்கிறாரு( ரெண்டுமே 5 ரூபாதான்)


கேமரா

கேமரா

முதல் பாகத்துல கேமரா வச்சு பேயைக் கண்டுபிடிக்கிறாரு. அதே மாதிரி இந்தப் படத்துலயும் கேமரா வச்சே கண்டுபிடிக்கிறாரு.( பேய்க்கு உருவமிலைன்னு சொல்றாங்க ஆனா கேமராவுல பேயா வர்ற ஹன்சிகா சூப்பரா மேக்கப் போட்டு போஸ் கொடுக்குறாங்க)


பேயோட எண்ணிக்கை

பேயோட எண்ணிக்கை

அரண்மனை படத்துல ஆண்ட்ரியா உடம்புல மட்டும் பேய் இருக்கும். இந்தப் படத்துல த்ரிஷா, சுந்தர்.சி ரெண்டு பேரு உடம்புலயும் பேய் இருக்கு.( 3 வது பார்ட்ல 3 பேய் வருமோ)


ஒரே ஒரு வித்தியாசம்

ஒரே ஒரு வித்தியாசம்

ரெண்டு படத்துலயும் ஹன்சிகா தான் பேய். படத்துல ஒரே ஒரு வித்தியாசம்னு வேணா இதை சொல்லலாம் அதாவது அரண்மனை படத்துல வினய் ஹன்சிகாவோட காதலனா நடிச்சிருப்பாரு. இதுல சித்தார்த், ஹன்சிகாவுக்கு அண்ணனா வர்றார்.(அப்பா ஒரு வித்தியாசத்தை கண்டுபிடிச்சாச்சு)


அச்சு அசல்

அச்சு அசல்

ஆனா என்னதான் 2 படமும் ஒரே மாதிரி இருந்தாலும் கூட தியேட்டர்ல இந்தப் படத்துக்கான கூட்டம் கொஞ்சம் கூட கொறையலன்னு சொல்றாங்க. இதையெல்லாம் வச்சுப் பாக்கும்போது இந்த வருஷ தமிழ் சினிமாவும் பேயோட கையிலதான் சிக்கப் போகுதா? அப்படின்னு லைட்டா ஒரு சந்தேகம் அப்பப்ப வந்து போகுது...


கடவுளே இந்த வருஷம் பேய்கிட்ட இருந்து தமிழ் சினிமாவை நீதான் காப்பாத்தனும். ஏன்னா மாஸ் ஹீரோக்களை பேயா பாக்குற தைரியம் சத்தியமா எனக்கில்லை.English summary
Common Scenes in Director Sundar.C's Aranmanai & Aranmanai 2 Movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil