»   »  தொடர்ந்து வசூலை வாரிக் குவிக்கும் இறுதிச் சுற்று மற்றும் அரண்மனை 2

தொடர்ந்து வசூலை வாரிக் குவிக்கும் இறுதிச் சுற்று மற்றும் அரண்மனை 2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்ஸ் ஆபீஸைப் பொறுத்தவரை மாதவனின் இறுதிச்சுற்று மற்றும் சுந்தர்.சியின் அரண்மனை 2 ஆகிய படங்கள் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகின்றன.

வெளியாகி 2 வாரங்கள் கடந்த நிலையிலும் கூட பாக்ஸ் ஆபீஸில் எந்தப் பின்னடைவும் இல்லாமல் தொடர்ந்து இவ்விரு படங்களும் அசத்தி வருகின்றன.


கடந்த வாரம் வெளியான பெங்களூர் நாட்கள், விசாரணை, சாஹசம் போன்ற படங்களுடன் அரண்மனை 2, இறுதிச்சுற்று ஆகிய படங்களின் வசூல் நிலவரங்களை இங்கே பார்க்கலாம்.


அரண்மனை 2

அரண்மனை 2

சுந்தர்.சி, த்ரிஷா, சித்தார்த், சூரி, ஹன்சிகா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் அரண்மனை 2. அரண்மனை படத்தை ஜெராக்ஸ் எடுத்தது போன்று இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்த போதிலும் கூட படத்தின் வசூலை அது அதிகம் பாதிக்கவில்லை. வெளியாகி 10 நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை சென்னையில் மட்டும் சுமார் 2.35 கோடிகளை வசூலித்து இருக்கிறது சுந்தர்.சியின் அரண்மனை 2.


இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

அரண்மனை 2 படத்துடன் வெளியான இறுதிச்சுற்று படமும் சென்னையில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் அனைவரும் பாராட்டித் தள்ள ஏ,பி, சி என மொத்த சென்டர்களையும் இப்படம் ஆட்டிப் படைத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1.96 கோடிகளை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் 2 வது இடத்தைப் பெற்றிருக்கிறது மாதவனின் இறுதிச்சுற்று.


பெங்களூர் நாட்கள்

பெங்களூர் நாட்கள்

பெங்களூர் டேஸ் படத்தை அப்படியே ஜெராக்ஸ் செய்து கடந்த வாரம் வெளியான பெங்களூர் நாட்கள் திரைப்படம் இதுவரை 56.65 லட்சங்களை வசூலித்து இருக்கிறது. ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, பார்வதி என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் கூட ரசிகர்களை வசீகரிக்க இப்படம் தவறி விட்டது என்பது படத்தின் மிகப்பெரிய பலவீனமாக மாறியிருக்கிறது.


விசாரணை

விசாரணை

அட்டக்கத்தி தினேஷ், ஆனந்தி, முருகதாஸ் மற்றும் பலரின் நடிப்பில் வெளியான விசாரணை படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். பெரிய நடிகர்கள், கமர்ஷியல் விஷயங்கள் இல்லாவிடினும் கூட ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் 38.88 லட்சங்களை வசூலித்து இருக்கிறது வெற்றிமாறனின் விசாரணை.


சாஹசம்

சாஹசம்

பிரஷாந்தின் மீட்புப் படம் என்ற பெருமை மட்டுமே சாஹசம் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. மற்றபடி பாக்ஸ் ஆபீஸில் படம் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. வெளியாகி 1 வாரம் கடந்த நிலையில் வெறும் 6.53 லட்சங்களை மட்டுமே வசூலித்து தயாரிப்பாளருக்கு சோதனையாக மாறியிருக்கிறது பிரஷாந்தின் சாஹசம்.


ரஜினிமுருகன்

ரஜினிமுருகன்

சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான இப்படம் சென்னையில் இதுவரை 3.52 கோடிகளை வசூலித்துள்ளது. அரண்மனை 2, இறுதிச்சுற்று ஆகிய படங்கள் காரணமாக இப்படத்தின் வசூல் குறைந்து விட்டதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.


தற்போதைய நிலவரப்படி வேறு புதிய படங்கள் வெளியாகும் வரை அரண்மனை 2, இறுதிச்சுற்று படங்களின் ஆதிக்கம் பாக்ஸ் ஆபீஸில் சற்று அதிகமாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்தத் திரையரங்க உரிமையாளர்களின் எண்ணமாக உள்ளது.


English summary
Sundar.C's Aranmanai 2 Beats Irudhi Suttru, Visaranai and Bangalore Naatkal at Chennai Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil