3 நாளில் ரூ 21 கோடி... அரண்மனையின் வசூல் சாதனையை முறியடித்தது அரண்மனை 2!
சுந்தர் சி யின் அரண்மனை முதல் பாகத்தின் வசூலை முறியடித்து சாதனை செய்தது சமீபத்தில் வெளியான அரண்மனை 2 படம்.
அரண்மனை படத்தின் பெரும் வெற்றிக்கு பின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது அரண்மனை 2.
இந்தப் படம் அதன் முதல் பாகத்தின் வசூலை மூன்றே நாட்களில் முறியடித்து சாதனை செய்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதே போல தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் படம் மிகப்பெரிய வசூல் சாதனையைப் புரிந்துள்ளது.
அரண்மனை 2 பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைவரையும் கவரந்துள்ளது குறிப்பிடதக்கது. இப்படம் பி , சி என அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
எதிர்மறை விமர்சனங்களுக்கிடையிலும் வெளியான மூன்றே நாட்களில் அரண்மனை 2 ரூ 21 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்று பாாக்ஸ் ஆபீசில் தகவல் வெளியாகியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications