அரண்மனை 4 - இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து உருவாகும் 4ஆம் பாக திகில் - திரில்லர் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் சுந்தர் சி நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அரண்மனை 4 திரைப்படத்தினை இப்பட இயக்குனர் சுந்தர் சி, குஷ்பூ சுந்தர் மற்றும் அருண் குமார் இணைந்து அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ்ஸ் மீடியா நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இப்படத்தினை ஏசியன் சுரேஷ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
அரண்மனை 4 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு சார்பில் நடிகர் ஆதி இசையமைத்துள்ளார்.
தமிழ் - தெலுங்கு என இரு மொழியில் திகில் - திரில்லர் படமாக உருவாகி 2024 மே மாத 3ல் உலகமெங்கும் வெளியாகும் அரண்மனை 4 திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
அரண்மனை 4 திரைப்படத்தின் கதை
கதைக்கரு: தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவரும் கணவன் மனைவியாக ஒரு அரண்மனையில் வசித்து வருகின்றனர். திடிரென இவர்கள் இருவரும் இறந்துபோக, தமன்னா-வை பார்க்க வரும் அவரின் அண்ணன் சுந்தர் சி, இந்த மரணத்தில் உள்ள முடுச்சுகளை அவிழ்க்கிறார். பின் என்ன ஆனது என்பதே அரண்மனை 4 திரைப்படத்தின் கதை.
கதை
தமன்னா பெற்றோரின் எதிர்ப்பை மீறி சந்தோஷ் பிரதாப்-யை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பெற்றோரை பிரிந்து இருவரும் 10 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
ஒரு நாள் அதிகாலையில் சந்தோஷ் பிரதாப் இறந்து போகிறார், அதே நாளில் தமன்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இவர்களின் மரணத்தை பலர் சாதாரணமாக கடந்து செல்கின்றனர். தமன்னா-வின் மரண செய்தியை அறியும் சுந்தர் சி (தமன்னாவின் அண்ணன்), ஊருக்கு வருகிறார்.
தமன்னா மரணத்திற்கு பின்பு அந்த ஊரில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு துப்பறிவாளனாக மாறுகிறார், சுந்தர் சி. பின் தமன்னா வாழ்ந்து வந்த அரண்மனையில் அமானுச சக்தி இருப்பதாக பல வதந்திகள் வருகிறார்.
சுந்தர் சி, தமன்னாவின் மரணத்திற்கான காரணம் மற்றும் அந்த அரண்மனையில் இருக்கும் அமானுச சக்தி பற்றிய உண்மையை அறிந்து அதனை எப்படி சமாளிக்கிறார் என்பதே அரண்மனை 4 திரைப்படத்தின் கதை.
அரண்மனை 4 ரிலீஸ்
அரண்மனை 4 திரைப்படம் 2024 பொங்கல் ரிலீஸ் படமாக ஜனவரி மாதம் களமிறங்கும் என அறிவிப்புகள் வெளியாகி, பின் சில VFX காரணங்களால் இப்படம் ஏப்ரல் மாத கோடை விடுமுறைக்கு தள்ளி சென்றது. பின் சில சர்ச்சையில் சிக்கிய அரண்மனை 4 திரைப்படம், 2024 மே மாத வெளியிட முடிவுகள் எடுத்து, மே 3ல் வெளியிட்டுள்ளனர், படக்குழுவினர்.
அரண்மனை 4 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிக பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. அடுத்தடுத்து இப்பட ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் ஆகி சமூக வலைத்தளத்தில் பலமுறை ட்ரெண்டிங் ஆகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.
இப்படத்தில் சிம்ரன் மற்றும் குஷ்பூ உருவரும் கிளைமாக்ஸ் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மேலும் இப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழியில் உருவாகி வெளியாகியுள்ளது.