பேச்சிலர் இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், திவ்யா பாரதி நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு தயாரிக்க, இப்படத்திற்கு இசையமைப்பாளராக பேச்சிலர் திரைப்படத்தின் நாயகன் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
காதல் திரைப்படமாக உருவாகும் பேச்சிலர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் மற்றும் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ரிலீஸ்
பேச்சிலர் திரைப்படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டர் 2019 செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விமர்சிக்கப்பட்டது.
பேச்சிலர் திரைப்படத்தின் கதை
ஜிவி பிரகாஷ் குமார் கோவையில் இருந்து பெங்களூருக்கு சென்று ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அங்கு அவருடன் பணி செய்யும் நாயகி திவ்யாபாரதி மேல் மோகம் கொண்டு அவருடன் நெருங்கி பழகத் தொடங்குகிறார். இவர்களுக்கிடையே காதல் மலர்கிறது. இருவரும் சேர்ந்து வாழ தொடங்குகின்றனர். இதனால் நாயகி கர்ப்பமாகிறாள். குழந்தை கலைக்க வேண்டும் என ஜிவி பிரகாஷ் கூற அதனை மறுக்கிறார், நாயகி. பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.