போதை ஏறி புத்தி மாறி அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் தீரஜ் நாயகனாக அறிமுகமாகும் மற்றும் பிரதைனி சர்வா நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, இசையமைப்பாளர் கே பி இசையமைத்துள்ளார்.
கதை
திருமணத்தை வைத்துக்கொண்டு திருமணத்தின் முந்திய நாள் தன் நண்பர்களின் வீட்டிற்கு செல்கிறார் இப்படத்தின் நாயகன் கார்த்தி. அங்கு இவரின் நண்பர்களுடன் குடிக்க ஆரம்பிக்கிறார். இவர் நண்பருள் ஒருவருக்கு போதை பழக்கம் இருக்கிறது. அவரின் போதை மருந்தை உபயோகிக்கும் நாயகன் போதையால் ரகளை செய்து வருகிறார்.
இவர்கள் இருக்கும் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர் பிருந்தா (பிரதாயினி), போதை மருந்து மாஃபியாக்களின் தகவல்களை திரட்டி ஒரு ஹார்ட்டிஸ்கில் வைத்திருக்கிறார். அதனை அவரது காதலரான (லிவிங்டூகெதர் கணவர்) போலீஸ் அதிகாரி அபகரிக்க முயற்சிக்கிறார். அந்த ஹார்ட்டிஸ்கை போதையில் இருக்கும் கார்த்திக்கிடம் தருகிறார் பிருந்தா. ஒருகட்டத்தில் போதை உச்சிக்கு ஏறி மட்டையாகிறார் கார்த்திக். போதை தெளிந்து எழும் போது,பிருந்தாவும், கார்த்திக்கின் நண்பர்களும் அந்த அப்பார்ட்மெண்ட்டில் இறந்துகிடக்கிறார்கள். அவர்களை யார் கொன்றது? அந்த வீட்டில் இருந்து கார்த்திக் எப்படி தப்பிக்கிறார் என்பதை நமக்கும் போதை ஏறும் அளவுக்கு காட்டுகிறது மீதிப்படம்.