twitter
    Tamil»Movies»Bodhai Yeri Budhi Maari
    போதை ஏறி புத்தி மாறி

    போதை ஏறி புத்தி மாறி

    U/A | 2 hrs 4 mins | Action
    Release Date : 12 Jul 2019
    2/5
    Critics Rating
    1.5/5
    Audience Review
    போதை ஏறி புத்தி மாறி அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் தீரஜ் நாயகனாக அறிமுகமாகும் மற்றும் பிரதைனி சர்வா நடிக்கும்  திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, இசையமைப்பாளர் கே பி இசையமைத்துள்ளார்.

    கதை

    திருமணத்தை வைத்துக்கொண்டு திருமணத்தின் முந்திய நாள் தன் நண்பர்களின் வீட்டிற்கு செல்கிறார் இப்படத்தின் நாயகன் கார்த்தி. அங்கு இவரின் நண்பர்களுடன் குடிக்க ஆரம்பிக்கிறார். இவர் நண்பருள் ஒருவருக்கு போதை பழக்கம் இருக்கிறது. அவரின் போதை மருந்தை உபயோகிக்கும் நாயகன்...
    • கே.ஆர். சந்துரு
      கே.ஆர். சந்துரு
      Director
    • ஸ்ரீநிதி சாகர்
      ஸ்ரீநிதி சாகர்
      Producer
    • கே பி
      கே பி
      Music Director
    • சபு ஜொஸ்ப் வி ஜே
      சபு ஜொஸ்ப் வி ஜே
      Editing
    • பில்மிபீட்
      2/5
      படத்தின் நாயகன் தீரஜ் ஒரு புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த படத்தை தோளில் தூக்கி சுமக்க நினைத்திருக்கிறார். தன்னால் முடிந்த அளவு போதையாகியிருக்கிறார். ஆனால் இன்னும் நிறைய பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்.

      பிரதாயினி, துஷாரா என இரண்டு நாயகிகளும் அவ்வப்போது வந்து தலைகாட்டுகிறார்கள். பிரதாயினி மட்டுமே ஓரளவுக்கு நடித்திருக்கிறார். சின்ன சின்ன ரியாக்ஷன்களை மட்டுமே செய்து கவர்கிறார் துஷாரா. மீரா மிதுனுக்கு இவர்கள் அளவுக்கு கூட வேலை இல்லை.

      படத்தை தூக்கி நிறுத்துவது கேபியின் இசையும், பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும் தான். கேபியின் பின்னணி இசையும், வெர்ஷின் ஸ்டோனர் பாடலும் தான் படத்தை காப்பாற்றுகிறது. ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கும் காட்சிகளை, விதவிதமான கோணத்தில் காட்டி, மிரள வைக்கிறார் கேமராமேன் பாலசுப்பிரமணியம். குழப்பமான திரைக்கதையை தெளிவாக காட்ட முயற்சித்திருக்கிறார் எடிட்டர் ரூபன். திரைக்கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் க்ளைமாக்ஸ் வேறு ரூட்டுக்கு நம்மை அழைத்து செல்கிறது. படம் முடிந்து வெளியே வரும் போது நமக்கும் போதை ஏறி புத்தி மாறிவிடுகிறது...