சார்லி சாப்ளின் கதை

    சார்லி சாப்ளின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, பிரபு, காயத்திரி நடித்த நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எம். காஜா மைதீன் தயாரிக்க, இசையமைப்பாளர் பரணி இசையமைத்துள்ளார்.

    கதை
    இந்த படத்தின் கதை மூன்று வெவ்வேறு நண்பர்களை பற்றியதாகும். ஒரு நண்பரின் மனைவி தன் கணவர் பற்றி எப்போதும் சந்தேகத்துடன் இருப்பவர், ஆனால், அவளுடைய கணவன் அவளுக்கு உண்மையாக உள்ளவர். இரண்டாவது நண்பர் காதல் மீது நம்பிக்கை இல்லாதவர். மூன்றாவது நண்பர் பெண்பித்தராக உள்ளவர். மூன்றாவது நண்பர், எந்நேரமும் சந்தேகப்படும் மனைவியிடம் இருந்து தப்பித்து, வேறொரு பெண்ணுடன் அவர் நேரம் செலவழிக்க ஏற்பாடு செய்து விட்டு அயல்நாட்டுக்குக் கிளம்பிச் செல்கிறார். ஆனால் எதிர்பாராமல் அவரது மனைவி வீட்டுக்கு திரும்பி விட, மற்ற இரண்டு நண்பர்கள் நிலைமையை தீர்க்க முயற்சி செய்வதைக் காட்டி நகைச்சுவையாகப் படம் செல்கிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie சார்லி சாப்ளின் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).