தேவி 2

  தேவி 2

  U | 2 hrs 6 mins | Comedy
  Release Date : 31 May 2019
  2.5/5
  Critics Rating
  2.75/5
  Audience Review
  தேவி 2 இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தம்மன்னா, நந்திதா, கோவை சரளா நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தின் தாயரிப்பாளராக இப்படத்தின் கதாநாயகன் பிரபு தேவா தயாரிக்க, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 

  இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அயனங்க போஸ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார். மேலும் இப்படமானது 2016-ம் ஆண்டு இதே படக்குழுவினரால் வெளியான தேவி திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும். நகைச்சுவையான காட்சிகளை கொண்டு ஒரு திகழ்...
  • ஏ எல் விஜய்
   Director
  • பிரபு தேவா
   Producer
  • கோபி சுந்தர்
   Music Director
  • பில்மிபீட்
   2.5/5
   முதல் பாகத்தில் ஒரு பேய். இந்த பாகத்தில் இரண்டு பேய். தேவியின் கதை களம் மும்பை. தேவி 2வின் கதை களம் மொரிசியஸ். அந்தப் படத்தில் தமன்னாவுக்கு பேய் பிடிக்கும். பிரபு தேவாவுடன் பேய் கான்ட்ராக்ட் போடும். இந்த படத்தில் உல்டாவாக பிரபுதேவாவுக்கு பேய் பிடிப்பதால், தமன்னா ஒப்பந்தம் போடுகிறார். அவ்வளவு தான் வித்தியாசம். மற்றப்படி இரண்டும் ஒன்றும் தான்.

   பேயை காட்டாமல் பேய் படம் எடுப்பது எப்படி என்று இயக்குனர் விஜய்யிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அந்தளவிற்கு இருக்கு ஆனா இல்லை என்ற அளவில் பேய் வந்து போகிறது. பேயைக் காட்டா காமெடி தான் படத்தின் மையம் என முடிவு செய்துவிட்ட பிறகு லாஜிக் எல்லாம் எதுக்கு. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கலகலப்பாக நகர்கிறது படம். குறிப்பாக குழந்தைகளுக்கு இப்படம் கட்டாயம் பிடிக்கும்.

   போன படத்தில் பிரபு தேவா செய்ததை, இந்தப் படத்தில் தமன்னா செய்து அசத்தி இருக்கிறார். காமெடி, சோகம், கோபம், கிளாமர் என எதற்கும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களுக்கு புல்மீல்ஸ் விருந்து படைத்திருக்கிறார். குறிப்பாக அந்த ஒரு பாட்டு போதும், ரசிகர்கள் முழு திருப்தியோட வீட்டுக்கு போவாங்க...