X
தா தா 87

தா தா 87

Action | 01 Mar 2019 | U/A |
Tamil

2.6 /5 Users

2.5 /5 Filmibeat

தா தா 87 கதை

தா தா 87   இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா மற்றும் ஜனகராஜ் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வேணு ரவிச்சந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 1988-ம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசன், அமலா நடித்திருக்கும் சத்யா திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும், மேலும் கமலஹாசனுக்கு பதில் சாருஹாசனும், அமலாவுக்கு பதில் சரோஜா நடித்திருக்கின்றனர், இத்திரைப்படத்தின் நாயகி சரோஜா அவர்கள் நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி ஆகும். கதை வடசென்னையின் ஒரு ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் ரோட் சைட் ரோமியோவாக சுற்றி திரிபவர் ஜொள்ளு பாண்டி (ஆனந்த் ரவி). அதனால் இவரை கண்டாலே தெறித்து ஓடுகிறார்கள் பெண்கள். அப்போது அந்த குடியிருப்புக்கு புதிதாக குடி வருகிறார் ஜனகராஜின் மகள் ஜெனி (ஸ்ரீ பல்லவி). ஜெனியை கண்டதும் காதலில் விழுகிறார் பாண்டி. அவரை சுற்றிச் சுற்றி வந்து தொந்தரவு கொடுக்கும் பாண்டியை, போலீசில் மாட்டிவிடுகிறார் ஜனகராஜ். அந்த ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் போட்டி போட்டு சட்டவிரோத தொழில்களை செய்து வருகிறார்கள் எதிர்கோஷ்டியான பாலாசிங்கும், மணிமாறனும். இவர்களை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என துடிக்கிறார் எம்.எல்.ஏ மனோஜ்குமார். ஆனால் இவர்கள் எல்லோரும் பயப்படுவது ஒரேயொருவருக்குதான். 87 வயதான ஏரியா தாதா சத்யா (சாருஹாசன்).  ஒரு கட்டத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஜொள்ளு பாண்டியை போட்டு தள்ளப்பார்க்கிறார்கள். அவர் தப்பி பிழைத்தாரா? ஜெனியுடனான காதல் என்னானது என்பது தான் படம்.
Read More

தா தா 87 நடிகர்கள் & படக்குழுவினர்

தா தா 87 அணியின் தகவல்

இயக்குனர் விஜய் ஸ்ரீ
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை லியாண்டர் லீ மார்ட்டி
தயாரிப்பாளர் வேணு ரவிச்சந்திரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தா தா 87 விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
யாரும் சொல்லத் துணியாத ஒரு கதையை கையில் எடுத்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களும் சிறப்பு. காவல் உதவி ஆய்வாளர் காட்டானாக இயக்குனரே நடித்திருக்கிறார். காதல், திருமணம் என்பது காமத்துடன் முடிந்துவிடுவதில்லை என்பதை, வெவ்வேறு வயதினரை கொண்டு உணர்த்த முயன்றிருக்கிறார். 'வெறும் ஐஞ்சு நிமிஷ சுகத்துடன் உன் காதல் முடிஞ்சிருதில்ல' என பாண்டியை பார்த்து ஜெனி கேட்கும் போது, படத்தின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இடைவேளை வரைக்குமான முதல் பாதி படத்தின் காட்சிகள் ஏனோ தானோவென நகர்கிறது. இடைவேளைக்கு பிறகு ஜெனி யார் என்பது தெரிந்தவுடன் தான் சுவாரஸ்யம் பற்றிக்கொள்கிறது. அதன் பிறகான காட்சிகள் மிகச் சிறப்பு. அதேநேரம் சைட்கேப்பில், கமலின் சத்யா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை படத்தில் சேர்த்திருக்கிறார். வயசான கமலாக சாருஹாசனும், வயசான அமலாவாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா. எப்டி பாஸ் இப்டி எல்லாம் யோசிக்கிறீங்க.

தா தா 87 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Ssssssssssssssssssssssssssßssssssssssssssssssssssszssssszsddddsdddsssddddsssssddfghhhhjjhhhhhhhhhhhhgfddddddggggdddghhhfddddfghhhhhhjjhffdddsfghhhhhfddfghhhjjhgdddsssyyhjjjjkkjkkkkkkkkkfcccvvvbhhhhhhhhhhhhhhhhhhhhhhhgfdddddddsdddccgggggggggghhhhhhh..

×
2.6 /5 Your Rating

தா தா 87

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+