X
கர்ணன்

கர்ணன்

Action | Drama | Social | 09 Apr 2021 | U/A | 159 Mins
Tamil

2.6 /5 Users

3 /5 Filmibeat

கர்ணன் கதை

கர்ணன் , ' பரியேறும் பெருமாள் ' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, ராஜீஷா விஜயன், யோகி பாபு, லால், நட்டி நடராஜன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படமானது நடிகர் தனுஷின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 41வது திரைப்படமாகும். சமூக கருத்துகள் உள்ளடக்கிய ஒரு ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா எடிட்டிங் செய்துள்ளார். ' அசுரன் ' என்ற ஒரு பிரமாண்ட வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்துள்ள இப்படம், உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கர்ணன் திரைப்படத்தின் டீஸர், பாடல் போன்ற அணைத்து வீடியோக்கள் கர்ணன் திரைப்படத்தின் புகைப்படங்கள் கர்ணன் திரைப்படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு தகவல்கள் கர்ணன் திரைப்படத்தின் கதை கதைக்கரு : ஒரு குறிப்பிடப்படும் கீழ் சமூகத்தினர் - மேல் சமூகத்தினராலும், மேல் சமூகத்தை சார்ந்த அரசாங்க அதிகாரிகளாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நாயகன், தன் மக்களுக்காகவும், தன் இனத்தின் உரிமைக்காக போராடுவதே இப்படத்தின் கதை.    கதை : கர்ணன் (தனுஷ்)-யை, காவல் துறையினர் அடித்து உதைத்து துன்புறுத்தி ரத்த வெள்ளத்தில் கைது செய்து சிறையில் அடைகின்றனர். இந்த சம்பவம் எதற்காக என்று இப்படம் எட்டு ஆண்டுகள் பின்னோக்கி சென்று கதை தொடங்குகிறது. பொடியன்குளம் என்ற கிராமத்தில் தனுஷ் தனது கிராம மக்களுடன் வாழ்ந்து வருகிறார். அமைதியாக வாழும் இவர்களுக்கு அரசங்கத்திடம் இருந்து எந்த ஒரு நல திட்டங்களும் இவர்களுக்கு வருவதில்லை. காரணம் சில அதிகாரம் படைத்த நபர்கள் தடுக்கின்றனர். பொடியன்குளம் கிராமத்து வழியாக செல்லும் பேருந்து கூட நிற்பதில்லை. அது ஏன் என்று கேட்டால், உங்களின் ஊருக்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்று கூறி நிரகிரிகின்றனர் பேருந்து ஓட்டுனர்கள். ஒரு நாள் தனுஷ் யாராலும் நிகழ்த்த முடியாத விஷயத்தை செய்கிறார். அதனால் ஊர் வழக்கப்படி கர்ணனுக்கு வாழ் கொடுத்த கொண்டாடுகின்றனர். தங்களின் ஊர்க்கு பேருந்து சேவை பெற பல வழியில் போராடுகிறார்கள் பொடியன்குளம் மக்கள். ஆனால் இவர்களின் குரல் யாரையம் அடையவில்லை. இதற்காக தனுஷ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் இவர்களின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் விஷமிகளை எதிர்த்து போராடுகிறார். தனது மக்களின் உரிமைக்காக போராடும் தனுஷ், ஒட்டுமொத்தமாக இந்த போராட்டத்தில் பல தடைகளையும், பல இழப்பையும் சந்திக்கிறார். உரிமையை மீட்டு தன் மக்களுக்கு தந்தாரா? இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பதே மாரி செல்வராஜின் அழுத்தமான திரைக்கதை. கர்ணன் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் டி 41 (D 41) என்ற தற்காலிய தலைப்பில் 2020 ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பினை தொடங்கிய படக்குழு, பின்னர் 2020 ஜனவரி 6ல் கர்ணன் என்ற தலைப்பு இப்படத்திற்கு பொருத்தப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமான அறிவித்தனர். கர்ணன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை திரைப்பட ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்கு பொருத்தமான வகையில் இப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை, மற்றும் பாடல் வரிகள் அமைந்து திரைப்பட ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது, கர்ணன். 
Read More

கர்ணன் நடிகர்கள் & படக்குழுவினர்

கர்ணன் அணியின் தகவல்

இயக்குனர் மாரி செல்வராஜ்
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்
தொகுப்பாளர் செல்வா
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கர்ணன் விமர்சகர்களின் விமர்சனம்

தமிழ் சமயம்
கர்ணன்- கண்டிப்பாக கொண்டாட வேண்டும்.
சினி உலகம்
மொத்தத்தில் மாரி செல்வராஜின் மாஸ்டர் பீஸ் கர்ணன்.
மாலை மலர்
மொத்தத்தில் ‘கர்ணன்’ அடக்க முடியாதவன்.
பில்மிபீட் - திரை விமர்சனம்
கர்ணன் மாரி செல்வராஜின் பிரம்மாஸ்திரமா?
பில்மிபீட்
ஒரு குறிப்பிடப்படும் கீழ் சமூகத்தினர் - மேல் சமூகத்தினராலும், மேல் சமூகத்தை சார்ந்த அரசாங்க அதிகாரிகளாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நாயகன், தன் மக்களுக்காகவும், தன் இனத்தின் உரிமைக்காக போராடுவதே இப்படத்தின் கதை.

கர்ணன் ட்ரெய்லர்

Video Thumbnail

கர்ணன் பாடல்கள்

கர்ணன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

கர்ணன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+