கஜினிகாந்த் இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில், ஆர்யா, சயீஷா சைகல், ராஜேந்திரன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஹர ஹர மகாதேவகி படத்தின் இயக்குனர் ஆவார். இத்திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
கதை:
தீவிர ரஜினி ரசிகரான நரேன் தனது மகனுக்கு (ஆர்யா) ரஜினிகாந்த் என பெயர் வைத்து பில்லா, ரங்கா, பாட்ஷா ரேஞ்சுக்கு மகன் மாசாக வரணும்னு ஆசைப்படுறார். ஆனால் மகனோ தர்மத்தின் தலைவன் ரஜினிகாந்த்தின் மறுபிறவியாக வளர்கிறார். ஆமாங்க படத்துல ஆர்யாவுக்கு ஞாபகமறதி குறைபாடு. ஆதனால அவர எல்லாரும் கஜினிகாந்துனு கலாய்க்கிறாங்க.
ஏதாவது ஒரு விஷயத்த செய்யும் போது, நடுவுலா ஏதாவது நடந்துட்டா, முன்னாடி செஞ்ச வேலைய சுத்தமாக மறந்துவிடும் ஆர்யாவுக்கு யாருமே பொண்ணு தர மாட்டேங்குறாங்க. அதுல ஒருத்தர் ஹீரோயின் சாயிஷாவோட அப்பா சம்பத். ஆனா ஆர்யாவுக்கு சாயிஷா மேல காதல் மலர, அவர துரத்தி துரத்தி டாவடிக்கிறாரு. வழக்கம் போல ஒரு கட்டத்துல சாயிஷாவும் ஓ.கே. சொல்ல, 'நான் நோ சென்னா பையன நீ எப்படி காதலிக்காமன்னு' வில்லனா மாறுகிறார் சம்பத். இதை எப்படி சமாளிச்சு நம்மாளு காதலியை கரம் பிடித்தார் என்பது காமெடி சரவெடியான மீதிக்கதை.