X
தமிழ் » திரைப்படங்கள் » கஜினிகாந்த்
கஜினிகாந்த்

கஜினிகாந்த்

Comedy | 03 Aug 2018 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

கஜினிகாந்த் கதை

கஜினிகாந்த் இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில், ஆர்யா, சயீஷா சைகல், ராஜேந்திரன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஹர ஹர மகாதேவகி படத்தின் இயக்குனர் ஆவார். இத்திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  கதை: தீவிர ரஜினி ரசிகரான நரேன் தனது மகனுக்கு (ஆர்யா) ரஜினிகாந்த் என பெயர் வைத்து பில்லா, ரங்கா, பாட்ஷா ரேஞ்சுக்கு மகன் மாசாக வரணும்னு ஆசைப்படுறார். ஆனால் மகனோ தர்மத்தின் தலைவன் ரஜினிகாந்த்தின் மறுபிறவியாக வளர்கிறார். ஆமாங்க படத்துல ஆர்யாவுக்கு ஞாபகமறதி குறைபாடு. ஆதனால அவர எல்லாரும் கஜினிகாந்துனு கலாய்க்கிறாங்க. ஏதாவது ஒரு விஷயத்த செய்யும் போது, நடுவுலா ஏதாவது நடந்துட்டா, முன்னாடி செஞ்ச வேலைய சுத்தமாக மறந்துவிடும் ஆர்யாவுக்கு யாருமே பொண்ணு தர மாட்டேங்குறாங்க. அதுல ஒருத்தர் ஹீரோயின் சாயிஷாவோட அப்பா சம்பத். ஆனா ஆர்யாவுக்கு சாயிஷா மேல காதல் மலர, அவர துரத்தி துரத்தி டாவடிக்கிறாரு. வழக்கம் போல ஒரு கட்டத்துல சாயிஷாவும் ஓ.கே. சொல்ல, 'நான் நோ சென்னா பையன நீ எப்படி காதலிக்காமன்னு' வில்லனா மாறுகிறார் சம்பத். இதை எப்படி சமாளிச்சு நம்மாளு காதலியை கரம் பிடித்தார் என்பது காமெடி சரவெடியான மீதிக்கதை.
Read More

கஜினிகாந்த் நடிகர்கள் & படக்குழுவினர்

கஜினிகாந்த் அணியின் தகவல்

இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை பாலமுரளி பாலு
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கஜினிகாந்த் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுகுத்துனு தன்னோட முந்தைய இரண்டு படங்களையும் அடல்ட் காமெடி படமா கொடுத்து கெட்ட பேர சம்பாதிச்ச சந்தோஷ், தன்னாலயும் பேமிலி என்டர்டெயினர் படம் எடுக்க முடியும்னு நிரூபிக்கிறத்துக்காகவே இந்த படத்த இயக்கி இருக்கார். அவரோட முயற்சி வீண் போலக. கஜினிகாந்த் ஒரு முழுமையான பேமிலி என்டர்டெயினர் படம் தான். படம் ஆரம்பிக்கிறதுல இருந்து முடியுற வரைக்கும் காமெடி சரவெடி தான். பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி படங்களுக்கு பிறகு ஆர்யாவுக்கு முக்கியமான படமான கஜினிகாந்த் இருக்கும். நடுவுல கொஞ்சம் டல்லடிச்ச ஆர்யாவோட மார்கெட்ட பிசியாக்க கஜினிகாந்த் உதவியிருக்கு. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில கிடைச்ச உற்சாகம் திரையில் தெரியுது பிரதர். படத்துல சதீஷோட காமெடி பஞ்ச் எல்லாமே அப்ளாஸ் அள்ளுது. ஆர்யாவ கலாய்க்கிறதுல சந்தானத்துக்கு நான் சலைத்தவன் இல்லன்னு காட்டியிருக்கார். கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், நரேன், உமா பத்மாநாபன், சம்பத், சாயிஷா, மதுமிதானு எல்லோரையுமே காமெடி பண்ண வெச்சிருக்கார் இயக்குனர். ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுகுத்து, கஜினிகாந்த்னு, இயக்குனர் சந்தோஷோட ஃபேவரைட் இசையமைப்பாளரா இருக்கிறவர் பாலமுரளி பாலு. வெரைட்டியான நம்பர்ஸ்ல தாளம் போட வெச்சிருக்காரு. ஹோலா ஹோலா பாட்டும், பார் சாங்கும் ஒரு கொண்டாட்டமான ஃபீல் கொடுக்குது. அதே நேரத்துல ஆரியனே பாட்டு செம மெலடி. அங்கங்க சின்ன சின்ன பிட்ஸ்சா ஒலிக்கிற கருகரு விழிகள் காதுக்குள்ள இனிமையா ரீங்காரமிடுது. பின்னணி இசைக்கு பெரிய ஸ்கோப் இல்லைனாலும் நிறைய டீடெயிலிங் செஞ்சிருக்காரு. சபாஷ் பாலமுரளி பாலு. படத்தில் ஆர்யா பலமுறை டைவர்ட் ஆனாலும், காமெடியில் இருந்து டைவர்ட் ஆகாமல் பயணிக்குது கதை. அதனால நீங்களும் தியேட்டருக்கு போய் கஜினிகாந்த் பார்த்து, மன அழுத்தத்தில் இருந்து 'டேக் டைவர்ஷன்' ஆகலாம். சிரிக்க மறந்துடாதீங்க.

கஜினிகாந்த் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கஜினிகாந்த்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+