ஜோதி இயக்குனர் கிருஷ்ணா பரமாத்மா இயக்கத்தில் வெற்றி, ஷீலா, மைம் கோபி முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹர்ஷா வரதன் இசையமைத்துள்ளார்.
ஜோதி திரைப்படத்தின் கதை
மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கடத்துவது குறித்து அறிந்த ரசிகர்களுக்கு, வீட்டில் தனியாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கே மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை கடத்தும் பயங்கரமான கதையை படமாக்கி உள்ளனர். இப்படியொரு குற்றத்தை செய்த அந்த குற்றவாளி யார் என்பதை போலீஸ் அதிகாரியான வெற்றி கண்டுபிடிப்பது தான் ஜோதி படத்தின் கதை