X
தமிழ் » திரைப்படங்கள் » ஜூலை காற்றில்
ஜூலை காற்றில்

ஜூலை காற்றில்

Romance | 15 Mar 2019 | U/A | 161 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

ஜூலை காற்றில் கதை

ஜூலை காற்றில் இயக்குனர் கே சி சுந்தரம் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன் தயாரிக்க இசையமைப்பாளர்  ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். கதை ஒரு தனியார் நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் பணியாற்றி வரும் நாயகன் ராஜீவ் (ஆனந்த் நாக்), இவர் தனது நண்பர் திருமணத்தில் நாயகி ஸ்ரேயா (அஞ்சு குரியன்)-யை சந்திக்கிறார். பின்னர் இவர்களுக்கிடையே வளரும் நட்பு நாளடைவில் காதலாக மலர்கிறது. இதனால் இவர்களின் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களுக்கு நிச்சதார்த்தம் நடக்க, பின்னர் அஞ்சு குரியன் மேல் இருந்த காதலில் சலிப்புத்தன்மை ஏற்படுகிறது அனந்த் நாக்-ற்கு. இதனால் அஞ்சுவிடம் இருந்து விலகியே இருக்கிறார். இந்நிலையில் இவரின் அலுவலகத்திற்கு புதிதாக வேளைக்கு வருகிறார் ரேவதி (சம்யுக்தா மேனன்). இவர் ஒரு உறுதியான பெண்ணிய வாதியாக திகழ்பவர். ஒரே அலுவலகம் என்பதால் இவருக்கும் இவரின் உயர் அதிகாரியான ஆனந்த்ற்கும் காதல் மலர்கிறது.  இவர்களின் நெருக்கம் அதிகமாகிறது. எனினும் பெண்ணிய வாதியாக திகழும் சம்யுக்தாவிற்கு அனந்த் நாக் மீது பெரியதாக விருப்பம் இல்லை. சம்யுக்தா மற்றவர்களுடன் பழகுவதை விரும்பாத அனந்த் நாக், சில அறிவுரைகளை கூற அது சம்யுக்தாவுக்கு பிடிக்கவில்லை. இறுதியில் அஞ்சு குரியனின் காதல் வென்றதா? அனந்த் நாக்கின் காதல் வென்றதா? இவர்களின் காதல் என்னவானது? என்ற முக்கோணக் காதல் கதையே ஜூலை காற்றில் படத்தின் மீதிக்கதை.
Read More

ஜூலை காற்றில் நடிகர்கள் & படக்குழுவினர்

ஜூலை காற்றில் அணியின் தகவல்

இயக்குனர் கே சி சுந்தரம்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜோசுவா ஸ்ரீதர்
தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜூலை காற்றில் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
இந்த காலத்து இளைஞர்கள் காதல், திருமணம் போன்ற விஷயங்களில் எந்த அளவுக்கு அலைபாய்கிறார்கள் என்பதை அனந்த் நாக் கதாபாத்திரம் மூலம் இயக்குனர் விளக்கியுள்ளார். அதனை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையின் மூலம் விவரித்து, வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். அனந்த் நாக்குக்கு நாயகனாக முதல் படம். குழப்பமாகும் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார். காதல் காட்சிகளிலும் குழப்பமாகவே இருப்பது ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் ஒரே மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். சம்யுக்தா மேனன், அஞ்சு குரியன் என இரண்டு கதாநாயகிகளும் படம் முழுக்க நம்மை கட்டி போடுகிறார்கள். அஞ்சு குரியன் சேலையில் அழகாக வந்து காதலிக்க வைக்கிறார். சம்யுக்தா மேனன் தன் பங்குக்கு மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிறார். இரண்டு கதாநாயகிகளும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் இருந்தே அன்ன நடை போட்டு மெதுவாக நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து காட்சிகள் விரிவதால், பார்த்த காட்சியையே மீண்டும் பார்ப்பது சுவாரஸ்யமாக இல்லை. காதல் படங்களில் வசனமும், இசையும் தான் முக்கியம். ஆனால் இதில் இந்த இரண்டு விஷயங்களும் சொதப்பல். படத்தின் நீளத்தையும் குறைத்து இருக்கலாம். காதலில் ஏற்படும் மனக்குழப்பங்களை தெளிவாக சொன்ன விதத்தில் இந்த ஜூலை காற்றில், இளைஞர்களுக்கான தென்றலாக மாறி இருக்கிறது.

ஜூலை காற்றில் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜூலை காற்றில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+