twitter

    ஜூலை காற்றில் கதை

    ஜூலை காற்றில் இயக்குனர் கே சி சுந்தரம் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன் தயாரிக்க இசையமைப்பாளர்  ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.

    கதை
    ஒரு தனியார் நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் பணியாற்றி வரும் நாயகன் ராஜீவ் (ஆனந்த் நாக்), இவர் தனது நண்பர் திருமணத்தில் நாயகி ஸ்ரேயா (அஞ்சு குரியன்)-யை சந்திக்கிறார். பின்னர் இவர்களுக்கிடையே வளரும் நட்பு நாளடைவில் காதலாக மலர்கிறது. இதனால் இவர்களின் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

    இவர்களுக்கு நிச்சதார்த்தம் நடக்க, பின்னர் அஞ்சு குரியன் மேல் இருந்த காதலில் சலிப்புத்தன்மை ஏற்படுகிறது அனந்த் நாக்-ற்கு. இதனால் அஞ்சுவிடம் இருந்து விலகியே இருக்கிறார்.

    இந்நிலையில் இவரின் அலுவலகத்திற்கு புதிதாக வேளைக்கு வருகிறார் ரேவதி (சம்யுக்தா மேனன்). இவர் ஒரு உறுதியான பெண்ணிய வாதியாக திகழ்பவர். ஒரே அலுவலகம் என்பதால் இவருக்கும் இவரின் உயர் அதிகாரியான ஆனந்த்ற்கும் காதல் மலர்கிறது. 

    இவர்களின் நெருக்கம் அதிகமாகிறது. எனினும் பெண்ணிய வாதியாக திகழும் சம்யுக்தாவிற்கு அனந்த் நாக் மீது பெரியதாக விருப்பம் இல்லை. சம்யுக்தா மற்றவர்களுடன் பழகுவதை விரும்பாத அனந்த் நாக், சில அறிவுரைகளை கூற அது சம்யுக்தாவுக்கு பிடிக்கவில்லை.

    இறுதியில் அஞ்சு குரியனின் காதல் வென்றதா? அனந்த் நாக்கின் காதல் வென்றதா? இவர்களின் காதல் என்னவானது? என்ற முக்கோணக் காதல் கதையே ஜூலை காற்றில் படத்தின் மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஜூலை காற்றில் with us? Please send it to us ([email protected]).