twitter

    கபடதாரி கதை

    கபடதாரி இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி, திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் லலிதா தனன்ஜெயன் தயாரிக்க, இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.

    அதிரடி மற்றும் திரில்லர் கிரைம் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராசமதி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி நேரடியாக தியேட்டர்களில் 2021 ஜனவரி 28ல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் 2019ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற "காவலுதாரி" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும்.



    கபடதாரி திரைப்படத்தின் கதை

    கதைக்கரு: சென்னையில் ஒரு 
    போக்குவரத்து துறை காவல் அதிகாரியாக பணிபுரியும் சிபிராஜ், இவர் பணியாற்றும் இடத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் ஒரு குழந்தையின் எலும்பு துண்டுகளை கண்டறிகிறார். பின் அந்த குழந்தை யார்? அந்த குழந்தையின் இறப்பிற்கு காரணம் என்ன என்னும் உண்மையை தேடி அலைகிறார், சிபி. ஆனால் ஒரு போக்குவரத்து துறை காவல் அதிகாரி, துப்புரவு செய்ய காவலர்களின் சட்ட விதிகள் தடுக்கின்றன, பின் எப்படி இவர் உண்மையை கண்டறிகிறார் என்பதே படத்தின் கதைக்கரு..

    கதை: 1977ல் ஒரு தொல்லையில் துறை அதிகாரி கொல்லப்படுகிறார், பின் வேறு ஒரு அதிகாரியின் மனைவி மற்றும் குழந்தைகள் காணாமல் போகின்றனர்.

    தற்போது சென்னையில் ஒரு போக்குவரத்து துறை காவல் அதிகாரியாக பணிபுரியும் சக்தி (சிபிராஜ்), குற்றப்பிரிவு துறைக்கு மாற விரும்புகிறார். இதற்காக பல முறை தனது உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இவரது கோரிக்கை மனுவை பலமுறை நிராகரித்துள்ளனர், உயர் அதிகாரிகள்.

    போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சிபிராஜ், ஒரு நாள் இவர் பணி செய்யும் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு மெட்ரோ பாலத்துக்கு அடியில் 3 பேரின் மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டெடுக்கப்படுகின்றன. 

    இந்த வழக்கு சமந்தமாக எந்த முன்னேற்றமும் இல்லாததால், தன்னை இந்த வழக்கு சமந்தமான விசாரணை செய்யும் குழுவில் சேர்த்துக்கொள்ள கிரைம் அதிகாரிகளிடம் கேட்கிறார். ஆனால் கிரைம் ஆய்வாளர் மறுக்க, சக்தி அந்த வழக்கை தனது கையில் எடுத்து தீர்க்க முடிவு செய்கிறார். 

    பாலத்திற்கு அடியில் கிடைக்கப்பட்ட எலும்பு துண்டுகள் மற்றும் மண்டை ஓடுகள் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. இதில் பல கோணங்களில் விசாரிக்கும் சிபிராஜ், பல திடுக்கிடும் தகவல்கள் கண்டறிகிறார்.

    இறுதியில் கிடைக்கப்பட்ட எலும்புகள் யாருடையது? கொலையா? விபத்தா? என பல கேள்விகளுக்கு விடையை கண்டறிந்தாரா சிபிராஜ். என்பதே படத்தின் சுவாரஸ்ய கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie கபடதாரி with us? Please send it to us ([email protected]).