களத்தில் சந்திப்போம் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் கதை
கதையின் இரட்டை நாயகர்களான ஜீவா - அருள்நிதி கபடி போட்டியில் எதிர்ரெதிர் அணியில் களத்தில் மோதுபவர்கள். களத்திற்கு வெளியில் இணைப்பிரியா நண்பர்கள். இவர்களுடைய வாழ்க்கை, இவர்களுக்கு இடையில் காதல், திருமணம் போன்ற விஷயங்களால் ஏற்படும் குழப்பங்கள் அதில் இருந்து மீண்டு வருவதே இந்த படத்தின் கதை.