twitter

    கென்னடி கிளப் கதை

    கென்னடி கிளப் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா, சூரி நடித்திருக்கும் ஸ்போர்ட்ஸ் மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தைசரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.

    கபடி விளையாட்டினை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் பி குருதேவ் மற்றும் படத்தொகுப்பாளர் ஆன்டனி இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    கதைக்கரு

    தமிழகத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள பெண்களை இந்திய அளவில் பங்குபெற வைத்து வெற்றிப்பெற வைப்பதே இத்திரைப்படத்தின் கதை கரு.

    கதை

    தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒட்டன்சத்திரம் என்னும் ஊரில் பாரதிராஜா தலைமையில் கென்னடி க்ளப் என்று ஒரு பெண்கள் கபடி அணி இயங்கி வருகிறது. அந்த அணியில் உள்ள பெண்களை நல்ல நிலைக்கு கொண்டு வர பாரதிராஜா போராடி வருகிறார். அந்த சமயத்தில் பாரதிராஜாவின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

    பாரதிராஜாவின் உடல்நிலை பாதிக்க பட்டதால் அந்த அணிக்கு புதிய பயிற்சியாளராக பாரதிராஜாவின் மாணவன் சசிகுமார் நியமிக்கப்படுகிறார். பின்னர் அந்த அணியின் பயிற்சியாளர் சசிகுமார் தலைமையில் அந்த அணி சிறப்பாக ஆடி இந்திய அளவில் பிரபலமாகிறது.

    இந்த கென்னடி க்ளப் குழுவில் உள்ள ஒரு பெண் இந்திய அணிக்காக ஆடுவதற்கு தேர்ந்தேடுக்கப்படுகிறார். ஆனால் ஒரு சில அரசாங்க அதிகாரிகள் ரூபாய் 30 லட்சம் பணத்தொகையை லஞ்சமாக கேட்கின்றனர். ரூ 30 லட்சத்தை ஏற்பாடு செய்ய வழியில்லாமல் அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார்.

    அந்த பெண்ணின் தற்கொலையை நினைத்து அஞ்சுகின்றனர் மற்ற பெண்களின் பெற்றோர்கள். பின்னர் அந்த கென்னடி கிளப்-ன் நிலை என்ன ஆனது? எனபதே படத்தின் மீதிக்கதை.


    **Note:Hey! Would you like to share the story of the movie கென்னடி கிளப் with us? Please send it to us ([email protected]).